பக்கம்:வரதன்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டே வினேயானது Ø - வல்லே. ஆதலால், அவன் முருகன் முழங்காலினைப் பிடித்துக் கடிக்க முயன்ருன். உடனே அருகேயிருந்த பெறுவர் சிலர் அவ்விருவரையும் விலக்கி அச்சண்டையினை அதனோடு நிறுத்தி விட்டனர். பின்னர், அவ்விருவருக் கும் சிறிது நேரம் வாய்ச் சண்டை நடந்தது. 'அடே, தடிமுருகா, ே வீட்டுக்கு வாடா ; நான் ன் பெரிய அண்ணுவிடம் சொல்லி உனக்கு நல்ல உதை வாங்கி வைக்கிறேன்’ என்ருன் வரதன். 'அடே போடா, கரிவரதா, இரு-இரு ; நீ அடித் ததை நான் தலைமை ஆசிரியரிடம் சொல்லி உனக்குப் பிரப்பம்பழம் வாங்கிக் கொடுக்கின்றேன் என்ருன் முருகன். பின்னர் மணி அடித்தது. பிள்ளைகள் அனைவரும் தத்தம் வகுப்பினை அடைந்தனர். பாடசாலையின் உட் புறம் மிக அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. அநேக நேர்த்தியான படங்கள் ஆங்காங்கே மாட்டப்பட்டிருங் தன. காகிதத்தாலும் களிமண்ணுலும் கப்பல், மைக் கூடு, யானை, பூனை முதலியன செய்து ஒருபுறம் வரிசை வரிசையாக வைக்கப்பட்டிருந்தன. மற்ருெரு புறம் பாடசம்பந்தமான பலவகைத் தானியவகைகள், உலோக வகைகள், பறவைக் கூடு, தேன்கூடு, பட்டுப்பூச்சியின் கூடு முதலியன அழகுபெற அமைக்கப்பட்டிருந்தன. வரதனுக்கு அன்று அப்பாடசாலை ஒரு பெரிய கண் காட்சிச் சாலையாகவே இருந்திருக்கும். ஆனால், அவன் அப்பொழுது நேர்ந்த சண்டையினல் எதையும் பொருட் படுத்தவில்லை. வகுப்புக்கு வந்த பின்னரும் வரதன், அச்சண்டையைக் குறித்தே சிந்திக்கலானன். அதல்ை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வரதன்.pdf/16&oldid=891102" இலிருந்து மீள்விக்கப்பட்டது