பக்கம்:வரதன்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலிவேடம் 13. வயதனும் முருகனும் சிறிது நேரத்திற்குள் தம் தம் ரி யடைந்தனர். வரதன், முருகனுக்கும் தனக் குil liந்த சண்டையைக் குறித்தேனும், ஆசிரியர் தம் மை, கண்டித்ததைக் குறித்தேனும் வீட்டில் ஒருவரிட முil ாைக்கவில்லை. முருகனும் அவ்வாறே அந்த நிகழ்ச் ைெய முற்றிலும் மறைத்து விட்டான். பகல் உணவு கொண்டதும் வரதனுக்கு முருகன் Iது இருந்த கோபம் சிறிது ஆறிவிட்டது. ஆதலால் அவன், பள்ளிக்குச் செல்ல முருகன் வருகையை ஆவ லோடு எதிர்பார்த்திருந்தான். நெடுநேரஞ் சென்றும் அவன் வராமையால், வரதன் முருகன் வீட்டுக்கு வலியச் செருமன். முருகன் முன்னரே பள்ளிக்குச் சென்று விட் தை அறிந்த வரதன் பெரிதும் வாட்டமுற்ருன். | lள்ளிக்குச் செல்லும் வழி வரதனுக்கு நன்ருகத். தெரியும். என்ருலும், அவன் தனியே சென்றதில்லை. முருகன் முன்னரே சென்ற செய்தியை, வரதன் தாய் அறிந்திருந்தால் அவள், தன் ம்கனைத் - தனியே அனுப்ப விரும்பமாட்டாள். ஏனெனில் அவன், தன் கைகளிலும் கால்களிலும் காப்பும் கொலுசும் அணிந்திருந்தான்; இரண்டு பொற்குண்டலங்கள் அவன் இருகாதுகளிலும் ப-பள வென்று மின்னிக் கொண்டிருந்தன ; பழுத்தில் பொன்னல் செய்த தாயித்து ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது. தான் தனியே செல்லவேண்டியிருத்தலே வரதன் அ. தாயினிடம் எவ்விதம் சொல்வான்? அப்போது அவள் அதன் காரணத்தை முதலிலிருந்து முடிவுவரையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வரதன்.pdf/20&oldid=891111" இலிருந்து மீள்விக்கப்பட்டது