பக்கம்:வரதன்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 வரதன் வாலிபன்_தம்பி, ஏன் அழுகின்ருய் ? உனக்கு வண்ண வேண்டும் ? வரதன்-யா, வான்-வீட்டுக்குப்-போகவேண்டும். வாலிபன்-ஓ, அப்படியா! நீ பயப்பட வேண்டாம். ான் அழைத்துச் செல்கின்றேன். தம்பி, உன் வீடு எங்கே இருக்கிறது ? அப்போது வரதன் தன் வீட்டின் முகவரியைக் கூறி அழுதான். உடனே அவன், வரதன் கண்களில் ததும் ம் நீரினைத் துடைத்து, அவன் முதுகில் தட்டிக் கொடுத்து, தம்பி, நீ அழவேண்டாம். நான் உன்னை உன் வீட்டுக்கு அழைத்துச் செல்கின்றேன். நீ சிறிதும் அஞ்சாதே’ என்று சொல்லி அச் சிறுவன, அருகே இருந்த ஒரு மிட்டாய்க் கடைக்கு அழைத்துச் சென் ருன். வரதன் தந்தை அவனுக்குக் கடையிலிருந்து ஒன் றையும் வாங்கித் தந்ததேயில்லை. அன்றியும், அன்று விழா ஆதலால், அந்த மிட்டாய்க் கடைக்காரன் வைத் திருந்த பலகார வகைகளுக்கு அளவேயில்லை. சில மிட் டாய்கள் பலவிதமான வர்ணங்களுடன் விளங்கின. சில கோபுரங்கள் போலும், மாடமாளிகைகள் போலும் அலங்கரிக்கப் பெற்றிருந்தன. இவைகளையெல்லாம் வரதன், கண்ணிலுைம் பார்த்ததேயில்லை. பலவித நிறங் கள் கொண்டு விளங்கும் நுக்கல்’ என்னும் தின்பண் டத்தை வரதன் நெடுநேரம் பார்த்துக்கொண் டிருந்தான். ஆதலின் அந்த இளைஞன், அவனுக்கு அப்பண்டங்களில் சிலவற்றை வாங்கித் தந்தான். வரதன் அவைகளை மிக்க ஆவலோடு வாங்கி அவைகளுள் ஒன்றை உடனே தன் வாயில் போட்டுக் கொள்ள முயன்ருன். ஆனால், அது மிகவும் பெரிதாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வரதன்.pdf/29&oldid=891130" இலிருந்து மீள்விக்கப்பட்டது