பக்கம்:வரதன்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு புதியவன் „ይፀ வும் கடினமாகவும் இருந்ததால் அவன் அதனைக் கடித்துத் தின்னலாயினன். அப்போதுதான் வரதன் முகத்தில் ளை தோன்றியது. பின்னர் அவ்வாலிபன், வரதனை நோக்கி, 'தம்பி, உனக்கு இன்னும் என்ன வேண்டும் சொல் என்ருன். அப்போது வரதன் வெள்ளைச் சர்க்கரையில்ை மாட மாளிகைகள்போல் செய்து இடையிடையே இரசகுண்டு கள் தொங்கவிடப் பெற்றிருந்த தின்பண்டத்தைச் சுட் டிக்காட்டி, ஐயா, எனக்கு அது வேண்டும் என்று ஆவலுடன் கூறினன். உடனே மிட்டாய்க் கடைக்காரன், தம்பி, அது விற்பதற்கன்று. நாங்கள் அதை வேடிக்கைக்காக வைத் திருக்கின்ருேம் என்ருன். " * அதுகேட்டதும் வரதன் முகம் வாட்டம் மடைக் தது. பின்னர் அவன், தன்னிடமிருந்த நுக்கலைத் தின்று கொண்டே ஏதோ எண்ணினன். அப்போது அவன் வாயில் யாதோ மெதுவான பண்டம் ஒன்று தட்டுப்பட் டது. உடனே அவன் அதனைக் கையில்ை எடுத்துப் பார்த்தான். 'ஓ ! இதில் முந்திரிப் பருப்புக் கூட இருக் கின்றது என்று சொல்லிக் கொண்டு குதித்தான். ஏனெ னில், வரதனுக்கு முந்திரிப்பருப்பின் மேல் விருப்பம் அதிகம். அதுகண்ட மிட்டாய்க் கடைக்காரன், ஆம் , தம்பி, நீ இது வரையில் இதனைத் தின்று பார்த்த தில்லையோ ? என்று புன்முறுவலுடன் வினவினன். அப்போது அவ்வாலிபன் சிரித்துக்கொண்டே வர தனைத் தட்டிக்கொடுத்து, தம்பி, உனக்கு இன்னும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வரதன்.pdf/30&oldid=891133" இலிருந்து மீள்விக்கப்பட்டது