பக்கம்:வரதன்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோசம் போனுன் 27. வரதன்-ஐயா, எங்கள் வீடு இன்னும் எவ்வளவு துாரத்தில் இருக்கிறது ? தாண்டவன்-ஏன் ? தம்பி, உனக்குக் கால் நோகின் றதா ? வரதன்-ஆம் ; நோகின்றது. தாண்டவன்-அப்படியா ? நாம் மிக அருகிலேயே வந்துவிட்டோம். இன்னும் கொஞ்சம் தூரம்தான் இருக்கிறது-தம்பி, உன் பெயர் என்ன ? வரதன்-என் பெயர் வரதன். தாண்டவன்- நன்று-நன்று அழகான பெயர். கல் லது தம்பி வரதா, உனக்குப் படிக்கத் தெரியுமா ? தாண்டவன் இதைக் கேட்டதும், வரதனுக்குத் தன் பலகை புத்தகங்களின் நினைவு வந்துவிட்டது. ஆத லால் அவன், அக்கேள்விக்கு விடை யளிக்காமல் மிக்க வருத்தத்தோடு தலைகுனிந்து இருந்தான். 'தம்பி வரதா, ஏன் பேசாமல் இருக்கின்ருய் ? என்று வினவிக்கொண்டே தாண்டவன் வரதன் முகத்தை நோக்கினன். அப்போது வரதன் கம்மிய குரலுடன், கண்ணிர் விட்டுக் கொண்டே, 'ஐயா என் பலகை-புத்தகங்களை யும், தொப்பியையும்-இரண்டு-கரிவேடக்காரர்கள்எடுத்துக்கொண்டு-போய்விட்டார்கள்’ என்ருன். இதைக் கேட்டதும் தாண்டவன் ஆ-அப்படியா ! இதை எனக்கு ஏன் முன்னரே சொல்ல வில்லை ? இருக் கட்டும் , எப்படியும் நான் அவர்களைக் கண்டுபிடிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வரதன்.pdf/34&oldid=891140" இலிருந்து மீள்விக்கப்பட்டது