பக்கம்:வரதன்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 வரதன் வின்றேன்’ என்று சொல்லிக்கொண்டே சிறிது தூரம் அவனை அழைத்துச் சென்ருன். பின்னர்த் தாண்டவன், தன் கையிலிருந்த இரண்டு பொட்டணங்களையும் அவிழ்த்தான். அவைகளுள் ஒன்று 'அல்வா என்னும் இனிய தின்பண்டம்; மற்ருென்று 'பகோடா' என்னும் காரமான பண்டம். அவைகளில் அவன் 'பகோடா'வை முதலில் வரதனிடம் கொடுத்தான். வரதன் அதனைச் சிறிது சிறிதாகத் தின்றுகொண்டு வங் தான். அப்போது தாண்டவன், தன்னிடமிருந்த யாதோ ஒரு மயக்கப் பொடியினை, வரதன் அறியாவண்ணம் அந்த அல்வாவில் கலந்தான். பின்னர் அவன் அதனை வர்தனிடம் கொடுத்து, 'தம்பி, இதனைத் தின்றுபார் ; இது மிகவும் இனிப்பாக இருக்கும்’ என்ருன். வரதன் அதில் சிறிது தின்றதும் துர-து என்று நிலத்தில் உமிழ்ந்தான். அப்போது தாண்டவன், தம்பி, என்ன உமிழ் கின்ருய் ?’ என்ருன். அதற்கு வரதன் இந்த அல்வாவில் என்னவோ இருக்கின்றது என்ருன். உடனே தாண்டவன் தம்பி, அதில் ஏலக்காய் பொடி செய்து போட்டிருப்பார்கள்; வேருென்று மில்லை. சாப்பிடு ; உன் உடம்பிற்கு நல்லது என்ருன். ஆதலால், வரதன் ஒன்றும் சொல்லாமல் மிகுதியைச் சிறிது சிறிதாகத் தின்றுகொண்டே சென்ருன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வரதன்.pdf/35&oldid=891142" இலிருந்து மீள்விக்கப்பட்டது