பக்கம்:வரதன்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோசம் போளுன் 29. சிறிது தூரம் சென்றதும் வரதன் ஐயா இங்கே ஒருவிடும் காணேனே! நீங்கள் என்னை எங்கே அழைத்துச் செல்கின்றீர்கள்’ என்ருன். அதற்குத் தாண்டவன், தம்பி, நாம் உன் வீட்டிற்குத் தான் போகின்ருேம் என்ருன். அப்போது வரதன் ஐயா, இது முற்றிலும் புது வழியாய் இருக்கின்றதே !’ என்ருன். உடனே தாண்டவன் வரதா, இது புது வழிதான் ; இவ்வழியாகச் சென்ருல் நாம் சீக்கிரம் வீடு போய்ச்சேர லாம் என்ருன். இவ்வாறு தாண்டவன் சொல்லிக் கொண்டிருக்கும் போது வரதன் கண்கள் அவனை அறியாமலேயே மூட லாயின : கால்நடை தளர்ந்தது. அப்போது வரதன், தன் மெதுவான குரலினுல் ஐயா-எனக்கு மயக்கமாய்இருக்-கிறது; என்ருன். உடனே தாண்டவன் தம்பி உனக்குத் துாக்கம் வருகிறதா? இதோ நான் உன்னைத் தூக்கித் தோளில் போட்டுக் கொள்கின்றேன்’ என்று சொல்லிக் கொண்டே வரதனைத் தன் இருகைகளாலும் தூக்கித் தோளில் சாய்த் துக்கொண்டான். சிறிது நேரத்திற்கெல்லாம் வரதன் பிணம்போல் ஆயினன். ஆதலால், அவனைத் தோளில் சுமந்து கொண்டு, அவன் நகைகளைக் கழற்றுவதற்குத் தக்க இடம் எங்கு அகப்படும் என்று பார்த்துக்கொண்டே தாண்டவன் நெடுந்துாரம் சென்ருன். ஏறக்குறைய மணி பத்திருக்கலாம் : அப்போது தாண்டவண் புழல் மாதவரத்திற்குச் செல்லும் வழியில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வரதன்.pdf/36&oldid=891144" இலிருந்து மீள்விக்கப்பட்டது