பக்கம்:வரதன்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 வரதன் ஒருநாள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவ்விளை யாட்டு என்ன வென்ருல் அவர்கள் ஒவ்வொருவரும் தங் கள் கைகளில் ஒன்றை முதுகின் புறமாக மடக்கி வைத் திருத்தல் வேண்டும். அவர்களுள் யாரேனும் ஒருவன் அவ்வாறு புரிய மறந்துவிட்டால் மற்ருெருவன் அவன் முதுகில் ஓங்கிக் குத்துவதே யாகும். முதுகின் புறமாகக் கையை மடக்கி வைத்திருக்கக் கண்ணனும், முருகனும் என்றும் மறப்பதே யில்லை. ஆனல் வரதனே, அவ்வாறு செய்ய மறந்து விடுவான். அதனால், கண்ணனும் முருகனும், வரதன் முதுகில் அடிக் கடி குத்துவார்கள். முருகன் எல்லோரினும் பெரியவகை இருந்தும் மிகமெதுவாகவே குத்துவான். கண்ணனே தன் வலிவுகொண்ட மட்டில் ஓங்கி ஓங்கிக் குத்துவான். ஆதலால், வரதனுக்குக் கண்ணனிடம் கோபம் மிகுதி யாக இருந்தது. கண்ணனைப் பழிக்குப்பழி வாங்க வேண்டு மென்று வரதன்எதிர்பார்த்திருந்தான். கண்ணனே சிறிதும் ஏமாறுவதாக இல்லை. எனினும் எப்போதேனும் சமயம் வாய்க்கும் என்று வரதன் கண்ணன் செல்லுமிடமெல் லாம் அவனைத் தொடர்ந்து சென்றுகொண் டிருந்தான். திடீரென்று கண்ணனுக்குத் தன் துணி சிறிது நெகிழ லாயிற்று. அவ்வித சமயங்களில் பிள்ளைகள் அம்பால்’ என்று சொல்லி விடுவார்கள். மறுபடியும் ஜூட்' என்று சொல்லும் வரையில் அம்பால் சொல்லியவனை ஒருவரும் முதுகில் குத்துதல் கூடாது. துணி இடுப்பி னின்றும் அவிழத் தொடங்கியதால் கண்ணன் அம்பால்’ என்று சொல்லிக் கொண்டே தன் துணியைக் கட்ட ஆரம்பித்தான். வரதன் அதற்குச் சிறிதும் உடன்படா மல் அதுதான் சமயம் என்று கண்ணன் முதுகில் 'கும் கும் என்று ஓங்கி ஓங்கிக் குத்திஞ்ன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வரதன்.pdf/39&oldid=891150" இலிருந்து மீள்விக்கப்பட்டது