பக்கம்:வரதன்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 வரதன் கண்ணன்-முருகா, அந்த வரதன் திருட்டுப்பையன் என்று நான் அப்போதே சொல்லவில்லையா ? அவன் உன்னைப் பெரியவன் என்றும் பாராமல் கல்லால் அடித் தானே ! அன்றியும் கடித்தானே! அவனுக்கு என்ன இறுமாப்பு ! முருகன்-ஆனால், பாவம் ! அவன் அதல்ை கம் ஆசிரியரிடம் நன்ருக உதைபட்டான். அன்றியும் நானும் உதைத்தேன். கண்ணன்-இவ்வளவுதான ? ஆனால், நீ வரதனி டம் மறுபடியும் பேசுவாயோ ? முருகன்-பேசவேண்டியதுதான். உன்னைப்போல், ஒருவனிடம் சண்டை போட்டால் சாகின்றவரையில் பேசாமல் இருப்பதா? ஆல்ை, நான் இப்போதே பேச மாட்டேன் ; இன்றைய மாலையோ அல்லது நாளைக்கோ பேசுவேன். கண்ணன்-அப்படியால்ை, நீங்கள் இருவரும் என் றைக்கும் ஒன்றுதான். நான்தான் வேறு ஆகிவிட் டேன். முருகன்-கண்ணு, நீ ஏன் அப்படிச் சொல்லுகின் ருய் ? உன்னை யார் பேசவேண்டாம் என்று சொன்னர் கள் ? வரதன் எத்தனையோ முறை உன்னிடம் வலிய வந்து பேசினன். தோன் அவனைப் புறக்கணித்தாய். வரதன் சிறிது துடுக்குத்தனம் உள்ளவன்தான். ஆனால், மிகவும் நல்லவன். அவன் தன் கையில் எதை வைத் திருந்தாலும் அதைத் தன் நண்பர்களுக்குக் கொடுத்து விடுவான். வீட்டார். ஏதேனும் தின்பண்டம் தந்தால், அதைக்கூட அவன் அப்படியே எடுத்துவந்து தன் கண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வரதன்.pdf/41&oldid=891154" இலிருந்து மீள்விக்கப்பட்டது