பக்கம்:வரதன்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 வரதன் கண்ணன்-அதிருக்கட்டும். எ ங் கே வரதன் ? அவன் இதுவரையில் பள்ளிக்கூடம் வரவில்லையே மணி யடிக்கும் நேரம் ஆகிவிட்டதே ! முருகன்-பாவம் ! அவன் எனக்காக நெடுநேரம் வீட்டில் காத்துக்கொண்டு இருப்பான். பிறகு மெது வாக வருவான். அன்றியும், அவன்தான் பராக்குப் பார்ப் பவனுயிற்றே ! நான் அருகே யிருந்தால் அவனை அவ்: வாறு செய்யவொட்டாமல் தடுப்பேன்.-அவன் நிற்க மாட்டான் ; எப்படியும் பாடசாலைக்கு வந்துவிடுவான்.கண்ணு, இப்போது அவன் என்னைப் பார்த்துவிட்டால் அவனுக்கு என்மீது மிகக் கோபமாய் இருக்கும். நீயும் நானும் ஒன்ருகச் சேர்ந்து கொண்டோம் என்றும், நாம் அவனைத் தனியாக விட்டுவிட்டோம் என்றும் வரதன் எண்ணி வருந்துவான். இன்றையதினம் அவனை நாம் இவ்விதமே அழவைக்க வேண்டும். வரதன் இவ்வாறு சொல்லிக் கொண்டிருக்கையில் மணியடித்தது. பிள்ளைகள் அனைவரும் பாடசாலைக்குள் சென்றனர். யார் உயர்ந்தவர் ? இவர்கள் படித்திருந்த பாடசாலை மிகவும் சிறியது. அங்கே மூன்று உபாத்தியாயர்களுக்கு மேல் இல்லை. அவர்களுள் ஒருவர் தலைமை ஆசிரியர். காலையிலும், பக லிலும் தலைமை ஆசிரியரே எல்லாப் பிள்ளைகளின் பெய ரையும் கூப்பிடுவார். வராதவர்களுக்கும் அவரே ஆள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வரதன்.pdf/43&oldid=891158" இலிருந்து மீள்விக்கப்பட்டது