பக்கம்:வரதன்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யார் உயர்ந்தவர் 39 வென்று இரைந்துகொண்டும் பாடசாலையைவிட்டு வெளியே வந்தனர். முருகன், அன்று தனியாகவே வீடு செல்ல எண்ணினன். ஆனால், அவன் சிறிது தூரம் செல்வதற்குள் கண்ணன் அவனைப் பின் தொடர்ந்தான். கண்ணன்-முருகா, நான் வரவேண்டாமா ? முருகன்-வரவேண்டாம் என்று சொன்னது யார் : வந்தால் எனக்கும் துனேதான். ஆனல், நீ எவ்வளவு துாரம் வரப்போகிருய் ? நீ இருப்பது தென்கோடி : நான் இருப்பது வடகோடி. கண்ணன்-முருகா, நான் இன்று உன் வீட்டுத் தெருவரையில் வருவேன். ஏனென்ருல், நான் என் அத்தை வீட்டுக்குச் செல்லவேண்டும். முருகன்-ஓ அப்படியா ? ஆனல் வா ; போகலாம். இன்று வரதன் வராதது எனக்கு மிகவும் துன்பமாகவே யிருக்கின்றது. கண்ணன்-வரதன் இன்று ஏன் வரவில்லை ? முருகன்-அதுதான் எனக்கும் தெரியவில்லை. நான் இன்று அவன் வீட்டுக்குப் போகாததினால் அவன் தாயார் அவனை நிறுத்திவிட்டிருக்கலாம். கண்ணன்-இருக்கலாம் ; அவன் நம்மைவிடச் சிறியவன்தானே ! முருகன், வரதன் வீட்டிற்குள் முதலில் வேகமாய் ಸ್ತ್ರಾಸ್ತ್ರಿ ஆனால், இரண்டொரு அடிவைத்ததும் சிறிது தயங்கினன். ஏனென்ருல், அவ்விருவரும் அன்று கால சண்டைபோட்டுக் கொண்டார்கள் அல்லவா ? அப்போது, அது முருகனுக்கு நினைவு வந்தது. பிறகு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வரதன்.pdf/46&oldid=891162" இலிருந்து மீள்விக்கப்பட்டது