பக்கம்:வரதன்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 வரதன் யும் வீட்டிற்குள் வந்தாள் பூத்தொடுக்க மனேயின் மேல் அமர்ந்து இரண்டொரு மலரினைக் கையில் எடுத் தாள் அவன் ஏன் பாடசாலைக்குப் போகவில்லை, என்று தனக்குள் சொல்லிக்கொண்டாள் ; உடனே தன் இருக்கைவிட்டு எழுந்தாள் மறுபடியும் தெருவிற்குச் சென்ருள் , வரதன் வருகையை எதிர்ப்பார்த்தவண்ணம் கின்றிருந்தாள். சிறிது நேரத்திற்கெல்லாம் முருகன் கண்ணனோடு தன் வீட்டிலிருந்து வந்தான். வரதன் அவர்களோடு வராமையை அறிந்த குமுதவல்லிக்கு உள்ளம் திடுக்கிட் டது. அவர்கள் தொலைவில் வரும்போதே ' எங்கே வரதன் ?’ என்று வினவினுள். மாமி அவன் அங்கு இல்லை என்று முருகன் கூறியதும் அவள், ஐயோ ! நான் என் செய்வேன் 1’ என்று கண் கலங்கி நின்ருள் : என் கண்மணி எங்கே சென்ருன்? என்று நாற்புறமும் சுற்றிப்பார்த்தாள் ; பின்கட்டிற்கு விரைந்து சென்று அம்மா, என் மகனைப் பார்த்தீர்களா ?’ என்ருள்: இன்று அவன் பாடசாலைக்குக்கூடச் செல்லவில்லை யாமே !’ என்ருள் ; மறுபடியும் முன்கட்டிற்கு வங் தாள் ; வரதா-வரதா என்று கூவிக்கொண்டே ஒவ் வொரு அறையாகச் சென்று தேடினுள் அடே முருகா நீ ஏன் இன்று அவனை உன்னோடு அழைத்துச் செல்ல வில்லை ?’ என்ருள். ஐயோ அவன் பாராக்குப் பார்ப் பவயிைற்றே ! எங்குச் சென்ருனே! என ஏங்கினுள் ; ‘ ஆ, ! அவன், தன் கைகளிலும் கால்களிலும் நகைகள் அணிந்திருக்கின்ருனே !’ என்ருள் ; நான் பாவி-அவன் செல்லும்போது கவனிக்காமற் போனேனே !! எனத் தன் மார்பில் அறைந்துகொண்டாள் அடே முருகா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வரதன்.pdf/49&oldid=891168" இலிருந்து மீள்விக்கப்பட்டது