பக்கம்:வரதன்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை

வரதன் அல்லது வழிதப்பிய சிறுவன்’ என்னும் இளைஞர்கட்கு ஏற்ற இந் நூல் தமிழ் நெறிக்காவலர் பேராசிரியர் மயிலை சிவமுத்து அவர்களால் எழுதப்பட்ட தாகும.

மேல் காட்டினர் அறிவு ஆற்றல்களிலும் விஞ்ஞானப் புதுமைகளிலும் சிறந்து விளங்குதல் போலவே காலத்துக் கேற்ற சுவையான நூல்கள், சிறு கதைகள், முதலிய வற்றை எழுதி வெளியிடுவதிலும் தலைசிறந்து விளங்கு கின்றனர். வாழ்க்கையில் நண்டபெறும் சிறு சிறு நிகழ்ச்சி களேயும் சுவைபடக் கதைகளாகப் புனேங்து அவற்றின் மூலம் பல அரிய படிப்பினைகளே இளைஞர்கள் மனத்தில் பதியவைப்பதில் அவர்கள் நமக்கு வழிகாட்டிகளாக உள் ளனர். அத்தகைய சிறந்த நூல்கள் பலவற்றை இன்று தமிழில் மொழி பெயர்த்து வெளியிடக்காண்கிருேம்.

நம் பேராசிரியர் மயிலை சிவமுத்து அவர்கள் மேல் நாட்டினர் கையாளும் அம்முறையைப் பின்பற்றித் தாமே சொந்தமாக எழுதவேண்டும் என்ற பேரவாவில்ை முப்ப தாண்டுகட்கு முன்பே சிறந்தபல சிறுகதைகளேப் புதுமை

பாகஎழுதினர். அவற்றுள் சிறந்த ஒரு நூல் இது.

குழந்தைகள் மீது .ெ க | ண் டு ள் ள பேரன்பில்ை அவர்களே அலங்கரித்துப் பொன்னலு ம் மணிய ாலும் செய்யப்பட்ட பல வி த அணிகலன்களைப் பூட்டிப் பள்ளிக்கு அனுப்புவது நம் காட்டுத் தாய்மார்களின் இயல்பு. அது எவ்வளவு துன்பத்திற்குக் காரணமாகிறது என்பதையும், குழங்தைகளிடம் உள்ள பராக்குப் பார்க்கும் குணம் எத்தகைய கேட்டிற்குக் காரணமாய் அமைந்துவிடுகிறது என்பதையும் இச்சிறு கதை நன்கு

விளங்குகிறது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வரதன்.pdf/5&oldid=622579" இலிருந்து மீள்விக்கப்பட்டது