பக்கம்:வரதன்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-44 வரதன் கேட்டு அக்கம் பக்கத்திலுள்ள ஆண்களும் பெண்களும் அங்கு வந்து கூடிவிட்டார்கள். மணி ஐந்துக்குமேல் ஆகிவிட்டது. வரதன் அப் போதும் அகப்படவில்லை. முருகனும் கண்ணனும் ஒரு வீடல்ல, ஒன்பது வீடுகள் சென்று தேடினர்கள் ஒரு தெருவே யன்றிப் பல தெருக்களிலும் சென்று தேடினர்கள்; பாடலைசாலைப் பிள்ளைகளின் வீடுகளி லெல்லாம் சென்று தேடினர்கள். எங்குத் தேடியும் வரதனைக் கண்டுபிடிக்க அவர்களால் இ ய ல வே வில்லை. சிறிது நேரத்திற்கெல்லாம் வரதன் தந்தை, வீடு வந்து சேர்ந்தார். அவர், தம் மைந்தன் காணப்படவில்லை என்பதை அறிந்ததும் உள்ளம் திடுக்கிட்டார்; உடலம் வியர்த்தார். அவருக்குச் செய்வது இன்னதென்று தெரியவில்லை. அவர் அங்கும் இங்கும் ஓடினர்; அக்கம் பக்கம் உள்ளவர்களை யெல்லாம் அழைத்தார்; என் மகனைப் பார்த்தீர்களா - பார்த்தீர்களா? என்ருர், பள்ளிக்கு விரைந்து ஓடினர்; தம் சுற்றத்தார் வீடுகளி லெல்லாம் சென்று தேடினர். எங்கெங்குச் சென்றும் வரதன் அகப்படவில்லை. ஆதலால் அவர், தலைமேல் கை வைத்து வருந்தலாயினர், ஐயோ! அவன் அறியாத குழந்தையாயிற்றே ! என்ருர் அவனுக்குக் கிழக்கு மேற்கு தெரியாதே' என்ருர்; அவன் எங்கே சென்று வழியறியாமல் விழிக்கின்ருனே !’ என்ருர். பின்னர் அவர், முருகனை நோக்கி அடே முருகா, உன்னை நம்பி அன்ருே என் குழந்தையை அனுப்பினேன்? நீ இப்படியும் செய்யலாமா?’ என்ருர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வரதன்.pdf/51&oldid=891173" இலிருந்து மீள்விக்கப்பட்டது