பக்கம்:வரதன்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொப்பியும் பலகையும் hil மூர்ச்சை யடைந்து நிலத்தில் சாய்ந்தாள். அப்போது, அருகே இருந்த சில பெண்கள் ஓடிவந்து அவள் கா' பைப் போக்கினர். உணர்வு சிறிது வந்ததும் குமுதல்ைளி, ஐயோ! என் மகனே,-என் கண்ணே,_ ல் செல்வமே-என் துரையே என்று சொல்லிச் சொல்.பி வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டாள் ; நிலத்தில் புரண்டு புரண்டு அழுதாள் ; மறுபடியும் மூர்ச்சை யடைந்தாள். அவன் தந்தையோ சுவரில் தலையை மோதினும் * இனி நான் உயிர்வாழேன்-உயிர்வாழேன் என்றர் பித்தம் பிடித்தவர்போல் அங்கும் இங்கும் ஓடினர் * அப்பா வரதா, என் மகனே-என் மகனே, உன்னை நான் எப்போது காண்பேன் 1’ என்று சொல்லித் தம் கைகளால் முகத்தை மூடிக்கொண்டு தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தார். மூர்ச்சை யடைந்திருந்த குமுதவல்லி மறுபடியும் சிறிது தெளிவடைந்து, ‘ஓ’ வெனப் புரண்டு அழுதாள் ; ஆ தெய்வமே உனக்குக் கண்ணில்லையா ? என்பாள் ; என் க்ண்ணே-என் செல்வத்தை-என் கிளியினை நான் எப்போது பார்ப்பேன் என்பாள் ; ஆ ! என் அறிவுள்ள துரையே, மாணிக்கக் கட்டியே, உன் அழகான பேச்சை நான் எப்போது கேட்பேன் ? என்பாள் ; ஐயோ ! என் மகனே, நாங்கள் உன்னைக்கொண்டு கரையேறலா மென்று இருந்தோமே !-ஓ ! தெய்வமே, எங்கள் வாயில் மண்ணைப்போட்டாயே ?’ என்பாள். !; இவர்கள் இவ்விதம் அழுவதைக் கண்டு முருகனும் கண்ணனும்கூட அழுதார்கள். பிறகு, அங்கிருந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வரதன்.pdf/60&oldid=891192" இலிருந்து மீள்விக்கப்பட்டது