பக்கம்:வரதன்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'வரதா-வரதா 1 54) பார் ; மறுபடியும் தேடத் தொடங்குவார் ; சிறிது நேரத் திற்குள் சலிப்புற்றுத் திரும்பிவந்து, திண்ணையில் அமர் வார்; எங்கே அந்த ஆசிரியர் ?-தேடப்போனவர் இன்னமும் வரவில்லையே !’ என்பார் ; எழுந்து வழி நோக்கி நிற்பார் ; ஐயா-பெரியவரே, என்மகன் வரு. வான ?’ என்பார் ; என்னமோ ! - ாேன் உங்கள் சொல்லையே நம்பிக்கொண்டிருக்கிறேன் என்பார். அப் போது, அருகிலிருந்த அப் பெரியவரும், கந்தன் என்னும் சிறுவனும், அவர் மனநிலைக்கு ஏற்றபடி தேறுதல் சொல்லிக்கொண்டு இருந்தார்கள். மணி ஒன்றடித்தது-இரண்டடித்தது; மூன்றும் ஆயிற்று. வரதனே வரவில்லை தேடச் சென்ற சுந்தர னும், அந்தத் தலைமை ஆசிரியரும் திரும்பி வரவில்லை. எல்லோருக்கும் ஏக்கம் அதிகமாயிற்று. அரசாங்கக் காவலர் எல்லாம் பொழுது விடிந்தால்தான் தெரியும் ; இங்கே நீங்கள் அடிக்கடி வந்து எங்களை ஏன் தொந்தரவு செய்கின்றீர்கள் ? என்றனர். வரதன் அன்னையோ அழுது அழுது அறிவு சோர்ந்து நிலத்தில் விழுந்து கிடக் தாள். அவன் தந்தையோ தலைமேல் கைவைத்துக் கொண்டு கண்ணிர் வடித்தவண்ணம் ஒர் திண்ணையில் அமர்ந்திருந்தார். மறுநாள் காலை, மணி ஏழாயிற்று அப்போதும் வரதன் வரவில்லை. அவர்களைத் தேடச் சென்ற தலைமை ஆசிரியரும் சுந்தரனுங்கூட வரவில்லை. ட்ாடசாலைப் பிள்ளைகளும், பிற ஆசிரியன்மார்களும், அக்கம்பக்கத் துள்ள ஆண்களும் பெண்களும் முன்புபோல் திரளாகக் கூடிவிட்டார்கள். வரதன் எங்கே சென்றிருப்பான் ? . -'அந்த ஆசிரியர் ஏன் இதுவரையில் வரவில்லை ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வரதன்.pdf/66&oldid=891204" இலிருந்து மீள்விக்கப்பட்டது