பக்கம்:வரதன்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'வரதா-வரதா!' (31 _ - _ அதுவரையில் பல்லும் துலக்கவேயில்லே பச்சைத் தண் னிரும் குடிக்கவில்லை. அவர்கள் அழுது அழுது உடல் இளேத்தனர் தேடித் தேடிக் காலும் இளைத்தனர். அடே முருகா, வரதன் வராமலே போய்விட்டால் -நாம் என்னடா செய்வது ?" என்று மெலிந்த குர லோடு ஏங்கிய முகத்தினனுய்க் கேட்டான் கண்ணன். இதைக் கேட்டதும் முருகன் சிறிதுநேரம் திகைத்து நின்ருன். பின்னர் அவன் கண்ணனைக் கோபத்தோடு நோக்கி, அடே, அப்படிச் சொன்னல் எனக்கு மிகவும் கோபம் வரும் !" என்ருன். கண்ணன் அப்போது ஒன்றும் பேசவில்லை. சிறிது நேரம் கழித்து முருகன், சாமி-அப்பனே, எங்கள் வரதன் எப்படியாவது அகப்பட்டு விடவேண்டும் ;-ஆ1. வினை தீர்த்த விநாயகரே,-எங்கள் பாடசாலைத் தெரு விலே உள்ள பிள்ளையாரே! எங்கள் வரதன் இன்றைக் குள் வந்து விட்டால்-நான் உனக்குத் தேங்காய் உடைத் துக் கருப்பூரங்கொளுத்துவேன்' என்று பலப்பல சொல் லிக்கொண்டே தன் தாடையில் பளிர்-பளிர் என்று அறைந்துகொண்டான் தலையிலும் குட்டிக் கொண் டான். அப்போது கண்ணன், கண்ணிர் வடித்தவண்ணம் கடவுளை நோக்கி, ஏதோ மொன மொண வென்று மனதிற்குள் துதித்துத் தானும் ஏதேதோ பிரார்த்தனைகள் செய்து கொண்டான். மணி பத்தடித்தது. அப்போது அங்கிருந்தோருள் ஒருவர், எங்கே தாமோதரப்பிள்ளே ? என்ருர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வரதன்.pdf/68&oldid=891208" இலிருந்து மீள்விக்கப்பட்டது