பக்கம்:வரதன்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 வரதன் அதற்கு மற்ருெருவர், அதைத்தான் நானும் கேட்க இருந்தேன். அவர் நெடுநேரமாகக் காணுேம். ஐயோ ! அவர், தம் மைந்தனைப் பிரிந்த சோகத்தால் எங்கேனும் ஒடிப்போய்விட்டாரோ I அல்லது குளத்தில் குட்டையில் விழுந்துவிட்டரோ !” என்று ஆத்திரத் துடன் கூறினர். அப்போது வேருெருவர், ஐயா, மெதுவாகப் பேசுங் கள். இதைக் கேட்டுவிட்டால் அவர் மனைவி தன் உயி ரையே விட்டுவிடுவாள் என்ருர். அவர்கள் இவ்விதம் பேசிக்கொண்டிருக்கும்போது, முருகனின் இளைய தமையனாகிய கந்தன் அங்கே வந்து நின்ருன். அப்போது அவர்களுள் ஒருவர், கந்தா, எங்கே தாமோதரப்பிள்ளை..? என்ருர். அதற்குக் கந்தன், நான்கூட அவரைத்தான் தேடு இன்றேன். அடுத்தவீட்டுப் பெரியவரும், அவரும் வரத ஜனத் தேடிக்கொண்டு எங்கோ சென்ருர்கள். அவர்கள் இதுவரையில் வரவில்லை. நேற்று இரவு சென்ற எங்கள் அண்ணுவும், அந்த ஆசிரியருங்கூட இவ்வளவு நேரமாகி யும் வரவில்லை. எனக்கோ இன்னது செய்வதென்று தெரியவில்லை என்று கண்கலங்கிக் கூறினன். அப்போது அவர்களுள் ஒருவர், அப்பா கந்தா ே அழவேண்டாம். அவர்கள் பெரியவர்கள்; எங்கே போய் விடுவார்கள் ? சிறிது நேரத்தில் எல்லோரும் வீடுவந்து சேருவார்கள். எங்களுக்கு வரதனைப்பற்றித்தான் கவலை யாக இருக்கின்றது. போலீசார் என்ன சொல்லுகின் ருர்கள் ? என்ருர். அதற்குக் கந்தன், ' நான் இப்போதுகூடப் போலிசுக் குப் போய்த்தான் வருகின்றேன். அவர்களைக் கேட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வரதன்.pdf/69&oldid=891209" இலிருந்து மீள்விக்கப்பட்டது