பக்கம்:வரதன்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வர த ன்

அல்லது வழி தப்பிய சிறுவன்


—O—



1. வரதன் வரலாறு

1ொகனுக்குப் பராக்குப் பார்ப்பதில் விருப்பம் அதிகம்.

அவன் ஓர் அப்பக் கடையைக் கண்டுவிட்டால் அரை மணி நேரம் அங்கேயே நின்று விடுவான். பெண்கள் கோலம் போடுதல், குதிரை கொள் தின்னுதல், பால் கான் பால்கறத்தல், கிழவிகள் வறட்டி தட்டுதல் முதலி பன யாவும் வரதனுக்கு மிக்க வியப்பாகவே இருக்கும். பாடசாலையில்கூட அவன் பராக்குப் பார்த்த வண்ணம் இருப்பான். தெருவில் இரண்டு பேர் பேசிக்கொண் டிருந்தாலும் வரதன், அவர்கள் வாய் பார்த்து நிற்க விரும் வான்.

வரதன் தந்தையின் பெயர் தாமோதரப் பிள்ளை. அவர் விய வயதில் நான்காம் வகுப்புக்குமேல் படிக்கவில்லை. ஆ ைலும் அவர் எப்படியோ ஒரு சிறிய அலுவலகத்தில் மாதம் எழுபத்தைந்து ருபா சம்பளம் பெற்று வந்தார். அருைக்கு வரதனையன்றி வேறு குழந்தைகள் இல்லை. ஆதலால் அவர், தாம் அடையாத பெருமைகளையெல் லாம் தம் மகன் அடையவேண்டுமென எண்ணினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வரதன்.pdf/7&oldid=629656" இலிருந்து மீள்விக்கப்பட்டது