பக்கம்:வரதன்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எங்கும் ஆரவாரம் 63 டால்,-நாங்கள் என்ன செய்வோம் ; அவன் அகப்பட் டால்தானே ?-என்கிருர்கள் என்ருன். அப்படியா ? அதிருக்கட்டும் தந்தி கொடுத் தாயே அது என்ன ஆயிற்று ' என்ருர் அவர்களுள் மற் ருெருவர். * நான் இரண்டிடங்களுக்குத் தந்தி கொடுத்தேன். இதுவரையிலும் ஒரு பதிலும் வரவில்லை, என்று ஏக்கத் துடன் கூறினன் கந்தன். – –" = 13. எங்கும் ஆரவாரம் ! அன்று வரதன் வீடு மிக்க அலங்கோலமாகவே இருந்தது. ஒருவரும் அவ்வீட்டைப் பெருக்கிக் கோலம் போட்டிலர் ; தெருவில் சாணமும் தெளித்திலர், செம்பு, தவலே முதலிய சாமான்கள்-போட்டவை போட்ட இடத்திலேயே கிடந்தன. தண்ணீர் ஊற்றிப் போகணியில் நிரப்பி வைத்திருந்த மல்லிகைமொட்டுகள் முடிப்போரின்றி ஒருபுறத்தே மலர்ந்து கிடந்தன. அவ்வாறே சமையலறையிலிருந்த சாமான்களும் தாறு மாருகக் கிடந்தன. அவ் வாறே சமையலறையி லிருந்த சாமான்களும் தாறு மாருகக் கிடந்தன அடுப்பில் மூட்டிய கட்டைகள், தாமே எரிந்து கரிந்து சாம்பல் பூ த் து ச் சிறு சிறுகொள்ளிக் கட்டைகளாய்க் கிடந்தன. முன் நாள் ஏற்றிய விளக்கும், அணைப்பாரின்றி அன்று காலையிலும் எரிந்து கொண்டிருந்தது. வரதன் அன்னையோ அழுது அழுது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வரதன்.pdf/70&oldid=891212" இலிருந்து மீள்விக்கப்பட்டது