பக்கம்:வரதன்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எங்கும் ஆரவாரம் (5'). பிறகு, ஒரு பெரிய ஆரவாரமும் உண்டாயிற்று. அஃது இன்னதென்று அறிந்துகொள்ள அங்குள்ள பெண்களுள் ஒருத்தி விரைந்து வெளியே சென்ருள். தெருவில் ஒரு பெரிய இரட்டை மாட்டுவண்டி நிற்றலையும், பலர். அதனைச் சூழ்ந்து கொண்டிருத்தலையும் அவள் கண்டாள். 'இந்த வண்டி இங்கு வந்து நிற்பதற்குக் காரணம் என்ன?" என்று அந்தப்பெண் மிக்க ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டிருக்கும்போது, அவ்வண்டியிலிருந்து அடுத்த வீட்டுப் பெரியவர் மெதுவாக இறங்கினர்; பின்னர், தாமோதரப்பிள்ளையும் இறங்கினர். அதே சமயத்தில் முருகன் தமையனுகிய சுந்தரனும் அவ்வண்டியின் முன் பக்கமாக வந்து கீழே குதித்தான். அப்போது, அவன் முகம் சுந்தரமாகவே விளங்கியது. சுந்தரனைக் கண்ட தும் அங்குள்ள எல்லோரும், வரதன் எங்கே-எங்கே ?? என்று கூவினர்கள். அபபோது, வரதன் அவ்வண்டியி லிருந்து எட்டிப்பார்த்தான். சுந்தரன் அச்சிறுவனத் தூக்கிக் கீழே விட்டான். பின்னர்த் தலைமை ஆசிரி யரும் அவ்வண்டியை விட்டுக் கீழே இறங்கினர். அந்தப்பெண்மணி வரதனைக் கண்டதும், வரதன் வந்து விட்டான்-வரதன் வந்து விட்டான்' என்று கூவிக்கொண்டே வீட்டிற்குள் ஒடினள். இதைக் கேட்டதும் கண்ணனும் முருகனும் மிக்க ஆனந்தத் தோடு வரதனைக் காண ஓடினர். ' வரதன் வந்து விட்டான் என்னும் சொல் குமுதவல்லியின் செவியில் நுழைந்ததும், மங்கி மாசுற்று இருந்த அவள் கண்கள் ஒளிகொண்டு விளங்கின துன்பத்தால் வாடி வெளுத் துத் தோன்றிய அவள் முகம் இன்பத்தால் பூரித்து அழகுற்று ஒளிர்ந்தது. அவள் மிக்க அவசரத்துடன், 5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வரதன்.pdf/72&oldid=891216" இலிருந்து மீள்விக்கப்பட்டது