பக்கம்:வரதன்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 வரதன் சிறிதுநேரத்தில் தலைமை ஆசிரியர் அங்கே வந்தனர். அவர், அப்பிள்ளைகள் எண்ணத்தை அறிந்து அவர்களுக்கு ஒருமணி நேரம் ஒழிவு கொடுத்தனர். உடனே பிள்ளை க்ள் அனைவரும் ‘ஓ’ வென்று கூவிக்கொண்டு, ' நான் முன்-நான்முன் என்று ஒருவரை யொருவர் தள்ளிக் கொண்டு வெளியே வர முயன்றனர். அதல்ை சிலர் இடறி விழுந்து வருந்தினர் ; சிலர் பலகை புத்தகங்களைக் கொட்டி வாரினர் ; சிலர் உதைபட்டும், இடிபட்டும், குத்துண்டும், மொத்துண்டும் வெளியே வந்து சேர்ந்த னர். பின்னர் அவர்கள், வரதன் வீட்டிற்கு விரைந்து ஒடினர். அங்கே வந்ததும், அவர்களில் சிலர் துள்ளித் துள்ளிக் குதித்தனர் ; சிலர் அங்கும் இங்குமாகத் தாவி யோடினர்; சிலர், தம் தலையிலிருந்த தொப்பியைத் தூக்கிப்போட்டுப் பிடித்தனர் ; சிலர் வரதா-வரதா, என்று வெளியே கின்று அழைத்தனர். வரதன் வீட்டிலிருந்து வெளியே வந்தான். அப் போது அவனுக்கு அத்தெரு, தேருங் திருவிழாவுமாய்க் காணப்பட்டது. பாடசாலைப் பிள்ளைகளில் சிலர், வரதனை நன்ருகக் காணவேண்டி அவன் வீட்டுத் திண்ணை, குறடு முதலியவைகளின் மீது ஏறிக்கொண் டனர்; சிலர் எதிர்வீட்டுத் திண்ணைகளின் மீதும் ஏறிக்கொண்டனர் ; மற்றும் பலர், அத்தெருவில் கூட்டம் கூட்டமாக கின்றனர். அப்போது அவர்களில் ஒருவன், ‘ ஆ, வரதா, ே எப்போது வந்தாய் ? என வினவினன். மற்ருெருவன், அடே வரத நேற்று இரவெல் லாம் எங்கே யிருந்தாய் ! என்ருன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வரதன்.pdf/75&oldid=891224" இலிருந்து மீள்விக்கப்பட்டது