பக்கம்:வரதன்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரதனைக் கண்டறிந்த வரலாறு 69. வேருெருவன், வரதா! உன் கைகள் எங்கே ? என வினவினன். ஆ நீ இப்படியும் செய்யலாமா ?' என்ருன் கோதண்டன். வரதா, உனக்காக நாங்கள் எங்கெங்கே சென்று தேடினுேம் தெரியுமா ? என்ருன் கோபாலன். வரதன், தன் நண்பர்களைக் கண்டதும் மிகுதியும் ஆனந்தித்தான் ; அவர்களோடு சிறிது பேசுதற்கும் எண் ணினன். ஆனால், அவர்கள் ஒவ்வொருவரும் அவனைப் பலப்பல கேட்ட வண்ணம் இருந்ததால், யாருக்கு என்ன விடையளிப்பதெனத் தோன்ருமல் வரதன் விழித்தான். 14. வரதனைக்கண்டறிந்த வரலாறு சிறிது நேரம் கழிந்தது ; அப்பொது தலைமை ஆசிரியரும், பிற ஆசிரியர்களும் அங்கே வந்தனர். அவர்களைக் கண்டதும் பிள்ளைகளின் ஆரவாரம் சிறிது சிறிதாக அடங்கியது. பின்னர் அவர்கள், ஒவ்வொருவராக அவ் விடத்தினை விட்டு நழுவலாயினர். அப்போது, தெருவில் நின்றுகொண்டிருந்த தாமோதரப் பிள்ளை. அடுத்த வீட் டுப் பெரியவரைப் பார்த்து, ‘ ஆ, ! கடவுள் செயலால், எப்படியோ அகப்பட்டான் வரதன் ! அவனுக்காக நடந்து நடந்து-அப்பப்பா ! என் காலும் கோகின்றது ' என்று சொல்லிக்கொண்டே தம் வீட்டுத் திண்ணையின் மேல் உட்கார்ந்தார். --

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வரதன்.pdf/76&oldid=891226" இலிருந்து மீள்விக்கப்பட்டது