பக்கம்:வரதன்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரதனைக் கண்டறிந்த வரலாறு 71 எவ்விதமேனும் வரதனக் கண்டுபிடிக்கவேண்டும் என்றே புறப்பட்டோம். ஆனல் முதலில் எங்கே செல் வதென்று எங்களுக்குத் தெரியவில்லை. நான் மயிலாப் பூர் வழியே போகலாம் என்றேன். நம் ஆசிரியர் 'திருவொற்றியூர் வழியாகப் போகலாம் என்ருர். பிறகு எவ்விதமோ-பேசிக்கொண்டே மூலைக்கொத்தளம் வரை யில் சென்ருேம். சிறிதுநேரத்திற்கெல்லாம் நம் ஆசிரியர், சுந்தரம் நாம் எங்கே போகிருேம் ? இது மூலைக் கொத்தளம் அல்லவா ? என்ருர். அதற்கு நான் ஆம்; வாருங்கள், திரும்பிச் செல்லலாம் என்றேன். 'ஆதலால், நாங்கள் இருவரும் திரும்பிச் சிறிது துாரம் வந்தோம். அங்கே ஒரு கிழவன் மினுக்குமினுக் கென்று ஒரு விளக்கை வைத்துக் கொண்டு, வெற்றிலைப் பாக்கும், கடலை பட்டாணியும் விற்றுக் கொண்டிருந்தான். நம் ஆசிரியர் அங்கே சென்று, 'இந்த வழியாக யாரேனும் ஒரு சிறுவன் அழுது கொண்டே சென்றன ? என்று அவனைக் கேட்டார். அவன் முதலில் எங்களுக்குச் சரியாகவே பதில் சொல்ல வில்லை. எனக்கு இதுதான வேலை ? இதுவரையில் எத்தனையோ பேர் போய்க்கொண்டும் வந்துகொண்டும் இருக்கிருர்கள்’ என்ருன். பிறகு நம் ஆசிரியர், அவனிடம் ஒரு காலணு கொடுத்து வெற்றிலைப் பாக்கு வாங்கினர்; அவர் அதனை மடித்துப் போட்டுக் கொண்டே வரதன் அங்க அடையாளங்களையும், அவன் வீட்டார் அவனைக் குறித்து வருந்துதலையும் அக் கிழவனி டம் சிறிது சிறிதாகச் சொல்லிக் கொண்டே வந்தார். அப்போது அக்கிழவனுக்குச் சிறிது இரக்கமும் பிறந்தது. அவன், அப்படியா ஐயோ பாவம்! சாமி, நான் காலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வரதன்.pdf/78&oldid=891230" இலிருந்து மீள்விக்கப்பட்டது