பக்கம்:வரதன்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 வரதன் தாமோதரப்பிள்ளையையும் அடுத்த வீட்டுப் பெரியவரை யும் சுட்டிக் காட்டிக் கூறினன். _. 15. முடிபு சுந்தரன் இவ்வாறு சொல்லிக்கொண் டிருக்கும் போது வரதன், அவன் தாய், கண்ணன், முருகன் முதலிய அனைவரும் அங்கே நின்றிருந்தனர். பின்னர் வரதன், தான் வழிதப்ப நேர்ந்த விதத்தினையும், அவ்வாலிபன் தன்னை ஏமாற்றி அழைத்துச் சென்றதையும், தனக்கு மயக்கங் கொடுத்துத் தன் நகைகளைக் கழற்றிக்கொண்ட தையும், தான் அவைகளைக் கேட்டதற்கு, அவன் தன்னைக் கத்தியால் குத்த முயன்றதையும், அப்போது அவ்வூரார் வந்து தன்னைக் காப்பாற்றியதையும் விளக்க மாகக் கூறினன். தலைமை உபாத்தியாயரும், பிற ஆசிரியர்களும் அவனுக்கு அப்போது பல நன்மதி கூறினர். வரதன் தாய் தந்தையர், தலைமை ஆசிரி யரின் சிரமத்திற்காக அவருக்கு நன்றி தெரிவித்தனர். பின்னர், அவ்வாசிரியர் முதல் அனைவரும் சென்று விட் டனர். கண்ணன் முருகன், சுந்தரன், கந்தன் இவர்கள் அன்று வரதன் வீட்டிலேயே உணவு கொள்ளலாயினர். பகலுணவு முடிந்ததும், இவர்கள் அங்கேயே நெடுநேரம் பேசிக்கொண் டிருந்தனர். தாமோதரப் பிள்ளை, சுந்தரன், கந்தன் முதலியவரின் குணத்தினைக் குறித்துப் புகழ்ந்து பேசினர். பிறகு அவர், தம் தொழிற்சாலைக்குச் சென்று விட்டார். கந்தனும், சுந்தரனும் குமுதவல்லியினிடம் நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வரதன்.pdf/85&oldid=891244" இலிருந்து மீள்விக்கப்பட்டது