பக்கம்:வரதன்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(ԼՔԼԳ-Լ- 79 சுந்தரன்-மாமி. வரதனுக்கு நகைகள் போட வேண்ட்ாம் என்று நான் அப்போதே சொல்லவில் லையா? அதல்ைதானே இவ்வளவு துன்பமும் வந்தது ? குமுதவல்லி-அது உண்மையே : இப்படி யெல்லாம் படவேண்டும் என்று வினை இருக்கின்றதே ! அது வந்துதானே தீரும் ? கந்தன்-மாமி, நீங்கள் எல்லாவற்றிற்கும் வினைவினை என்று சொல்லிவிடுங்கள். நாளைக்கு வரதன, நீ ஏன் படிக்கவில்லை என்ருல், அதற்கு அவனும், அது என் வினை என்று சொல்லட்டும். இப்படி இவர்கள் நெடுநேரம் ஏதேதோ விளையாட் டாகப் பேசிக்கொண் டிருந்தனர். பிறகு, அவரவர் வீடு போய்ச் சேர்ந்தார்கள். கண்ணனும், தன் வீடுபோய்ச் சேர்ந்தான். வரதன் வீட்டுக்கு அன்று வருவார் போவார் மிகுதியும் இருந்தனர். வரதன் காணப்படவில்லை எனத் தந்தி சென்றதால் செங்கற்பட்டிலிருந்த வரதனின் மாமன்,'மாமி முதலியவர்களும், பெங்களுரிலிருந்த அவன் சிறிய தந்தையுங் கூட வந்துவிட்டனர். ஆதலால், அன்று வரதன் வீடு ஒரு பண்டிகை நாள் போன்றே காணப்பட்டது. மறுநாள் வரதனும் முருகனும் பழக்கம்போல் பாடசாலைக்குச் செல்லலாயினர். அன்று, வரதன் ஓர் ஆபரணமும் அணிந்திராததைக் கண்டு பாடசாலைச் இறுவர்கள் முதலில் வருத்தமே அடைந்தனர். பின்னர், அவர்களுள் ஒருவன், அடே வரதா, இப்போது உன் முகத்தில் களையே இல்லை என்ருன். உடனே முருகன், ஆண்பிள்ளைகளுக்கு ஆபரணம் ஏன் என்ருன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வரதன்.pdf/86&oldid=891246" இலிருந்து மீள்விக்கப்பட்டது