உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104

வரலாற்றுக்கு முன்



தென்தமிழ்நாட்டு அகன்பொதியில் திருமுனிவன்
     தமிழ்ச்சங்கம் சேர்கிற் பீரேல்,
என்றும்அவன் உறைவிடமாம் ஆதலினால்
     அம்மலையை இறைஞ்சி ஏகி"

                                    (நாடவிட்ட படலம், 31)

என்று சுக்கிரீவன் அனுமன் முதலிய வானர வீரர்களுக்கு வழி கூறி அனுப்புகிறான். எனவே, அங்கே ஆரணிய காண்டத்தில் கண்ட அகத்தியர் வேறு என்பதும், பொதியமலை அகத்தியர் வேறு என்பதும் கொள்ளவேண்டியுள்ளன. கம்பர் தாம் முன் கூறியதைப் பின்னும் வலியுறுத்தும் கொள்கை உடையவர் என்பதை இராமாயணம் பல இடங்களில் எடுத்துக்காட்டும். இங்கு அகத்தியரைக் கூற வருமுன் சுக்கிரீவன் வாக்கிலேயே,

“பண்டு.அகத்தியன் வைகிய தாப்பகர்
தண்டகம்”

                    (நாடவிட்ட படலம், 17)

என முன் அகத்தியர் வைகிய இடம் எனக் காட்டுகின்றார். அவர் பண்டு அங்கே தங்கிய அகத்தியரே பிறகு பொதியிலில் சேர்ந்திருப்பார் என எண்ணி இருப்பதில் தவறில்லை. ஆயினும், அவர் தண்டகாரணியத்தில் சில நாட்களே தங்கியிருப்பவராயின், அங்கே தம்முடன் இராம இலக்குவர்களைத் தங்கியிருக்க வேண்டினர் என்று கொள்வது எவ்வாறு பொருந்தும்?[1] திரு. கா. சுப்பிரமணியப் பிள்ளை அவர்கள் தம் தொல்காப்பிய எழுத்ததிகார முன்னுரையில் அகத்தியர் இருவர் இருந்தனர் எனவும் அவர் இருவரும் பல்வேறு வகையில் வேறுபட்டு வாழ்ந்தவராவர் எனவும் குறிக்கின்றார்[2]. என்றாலும், இதில் உள்ள தவறு எண்ணத் தக்க ஒன்று. இருவரையும் ஒருவரெனக் கருதிய கம்பர், இடர்ப்பட்டு


  1. அகத்தியப் படலம், 54.
  2. தொல். எழுத். நச்சி. முன்னுரை பக்கம், X.XVIII (கழகப் பதிப்பு.)