அகத்தியர் யார்? எங்கே?
105
இவ்வாறு கூறினாலும், வான்மீகியார் இவற்றையெல்லாம் சொல்லவில்லை. மற்றொன்றும் நோக்கற்பாலது. மேலே நாம் காட்டியபடி, இராம இலக்குமணர் சீதையுடன் அகத்தியரிடம் தங்கிப் பிறகு தெற்கு நோக்கி நெடுந்தொலைவு வந்து பல அசுரரைக் கொன்று, பின்பு கீதையை இழந்து, அவளைத் தேடிக்கொண்டு தெற்கில் நெடுந்தொலைவு வந்த பிறகு கிட்கிந்தையில் அனுமன் முதலியவர்களைக் காண்கின்றனர். அங்கிருந்து தெற்கே அனுப்பப் பெறும் அனுமன் முதலியவர்களுக்கு மறுபடியும் வடக்கே விட்டு வந்த அகத்தியர் இருந்த இடத்தைப்பற்றிச் சொல்லுவது பொருத்தமானதாகுமா? எனவே, உண்மையில் அகத்தியர் இருவர் இருந்திருக்க வேண்டும் என்பதும், அவர் இருவரையும் கம்பர் ஒருவரெனக் கருதியதால் வந்த தடுமாற்றமே இது என்பதும் நன்கு விளங்கும். அகத்தியர் இருவராய் இருக்கலாமோ என ஸ்மித்து என்பாரும் ஐயுறுகிறார்.[1]
இனி, இக்காலத்தில் இவ்வாறு வரலாற்றுக்கு ஒவ்வாத கதைகளும் கருத்துக்களும் உள்ளமையின், அகத்தியர் கதையே வெறுங்கற்பனை என்றும், அது வட நாட்டவர் ஆதிக்கத்தை அந்த வரலாற்றுக்கு முற்பட்ட நாளிலே தென்னாட்டின்மேல் செலுத்த ஆண்ட வெறுங்கதையே என்றும் கூறுவர் அறிஞர்[2]. சற்று ஆராய்ந்து பார்ப்பின், இப்படி முடிவு செய்வதிலும் வடநாட்டு அகத்தியரின் வேறாகத் தமிழ்நாட்டின் பொதிய மலையில் வேறு ஓர் அகத்தியர் இருந்தார் எனவும், அவருக்கும் வடமொழிக்கும் தொடர்பு ஒன்றும் இருந்ததில்லை எனவும், பெயர் ஒற்றுமையால் இடைக்காலத்தில் இருவரையும் ஒருவரெனக்
வ.—7