உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



7. தொல்காப்பியத்துக்கு
முன்னும் பின்னும்


மிழிலே காலத்தால் முந்தியநூல் என்று கொள்ளப்படுவது தொல்காப்பியமேயாகும். அதற்கு முன்பே பல இலக்கியங்களும் சில இலக்கணங்களும் இருந்தன என்பது உண்மையேயாயினும், அவற்றுள் ஒன்றேனும் இன்று நாம் பெற இயலவில்லை. தொல்காப்பியர் பல முடிபுக்ளைக் கூறும்போது 'என்ப,' 'என்மனார் புலவர்' என்னும் சொல்லையும் சொற்றொடரையும் பயன்படுத்துவதனாலேயே அவருக்கு முன்னரே இலக்கணப் புலவர் பலர் வாழ்ந்திருக்க வேண்டும் என்பது நன்கு தெளிவாகின்றது. இலக்கியங் கண்டதற்கு இலக்கணம் இயம்புதல் மரபாதலின், இந்தப் பேரிலக்கண நூலுக்கு முன் பல இலக்கிய நூல்கள் இருந் திருக்கவேண்டும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். எனவே, தொல்காப்பியர் காலத்துக்கு முன் தமிழ் வளம் பெற்ற ஒரு மொழியாய் இருந்தது என்பது தெளிவு.

இத் தொல்காப்பியத்தின் காலம் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் என்பது ஆராய்ச்சியாளர் கண்ட முடிவு. இந்தியநாட்டு வரலாறு சுமார் 2500 ஆண்டுகள் அளவிலே அடங்குவதை ஆராய்ச்சியாளர் அறிவர். அதற்கு முற்பட்ட காலமெல்லாம் வரலாற்று எல்லைக்கு அப்பாற்பட்டதேயாம். தொல்காப்பியர் காலத்தை இன்றைக்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னது என்று கூறுவர் வரலாற்று ஆய்வாளர். தமிழ் இலக்கியங்கள் அக்காலத்தை 'இடைச்