தொல்காப்பியத்துக்கு முன்னும் பின்னும்
117
சொற்களே அனுமன் ஆயிற்று என்றும் வேதத்தில் அனுமனுக்கு அப்பெயரே இல்லை என்றும், விருஷகபி’ என்ற பெயரே ஆளப்பெறுகின்றது என்றும்."காட்டுகின்றார்[1].” இருக்கு வேதத்தில் (X: 86) இந்த ஆண்மந்தி வழிபாடு ஆரியர்களால் ஏற்றுக்கொள்ளப்பெற்ற கருத்தை அவர் ஆதாரமாகக் காட்டுகின்றார்[2] . இப்படியே திரு. P.T. சீனிவாச ஐயங்கார் அவர்கள், இந்தியாவின் கற்காலம்’ என்ற தமது ஆங்கில நூலிலே சிவன், கண்ணன், திருமால், முருகன் ஆகியோர் திராவிடர்களே என்றும், இருக்கு வேதத்தில் கண்ணன், சிவன் இருவரும் ஆரியருக்கு மாறுபட்ட காரணத்தாலே ஆரியர்கள் அவர்களோடு போரிட்டார்கள் என்றும் காட்டுவர். அதற்கென அவர் இருக்குவேத மேற்கோள்களைக் குறித்துள்ளார்[3] . சிவனைப்பற்றி முதன்முதல் அதர்வண வேதத்திலேதான் உருத்திரனாக வணங்கும் முறையில் குறிக்கப் பெற்றுள்ளதாம். இருக்கு வேதத்தில் சிவன் சில தலைவர்களுடன் சேர்த்து எண்ணப்பட்டு, இந்திரனுக்கு எதிரியாகக் காட்டப்படுகின்றான். இருக்கு வேதம் VII : 21-5, X : 9-8, Vll: 18-7, X : 27-9, X : 27.9 ஆகிய பகுதிகளில் இந்தக் குறிப்புக்கள் உள்ளன என்பர்[4]. சிவனைத் தவிரக் கண்ணன் அல்லது திருமால் எனப்படும் கிருஷ்ணனும், ஆரியருக்கும் அவர் தலைவனாகிய இந்திரனுக்கும் மாறுபட்டவன் என்பதை இருக்குவேதத்தின் VIII:85:13
- ↑ The Vedic India p. 169
- ↑ ibid. p. 164.
- ↑ The Stone Age in India, p. 49.
- ↑ Together came the Pakthas, the Bhatanns, the Alinas, the Sivas the Vistranins Yet to the Tritsus came the Arya’s comrade through love of Spoil and heroes’ war to lead them. . R. V. VII : 187. The Pakthas and rest mentioned in the first two lines of the stanza appear to have been non-aryan tribes opposed to the Tritsus.