பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

118

வரலாற்றுக்கு முன்


to 15, | : 11 : 20.7, IV : 16:13, Vlll : 85:16, li : 42 ஆகிய பகுதிகள் விளக்குகின்றன என்பதை அவரே எடுத்துக்காட்டுகின்றார். அதில் திருமால் கறுப்பனாய், அரக்கனாய், விரும்பத் தகாதவனாய், ஆரியருக்கு மாறுபட்டவனாய்க் (The Dusky brood- the dark aborignes who opposed the Aryan Black Rakshasa, one among seven enemies) காட்டப்படுகிறான். இவையெல்லாம் ஆரியர் வடவிந்தியாவில் கால் வைத்து, இருக்குவேதம் எழுதப்பட்ட காலத்தனவாகும். யசுர்வேத தாருண முதற்பிரசினத்துள்ள ஐந்தாம் அன்வாக முதற்பஞ்சாதியில் இந்திரன், அக்கினி, முதலியோர் உருத்திரனுக்கு விரோதிகள் என உள்ளதை ரா. ராகவய்யங்கார் காட்டியுள்ளார். என்றாலும் பின்னர் இந்நாட்டு மக்களோடு வாழ்ந்து அவர்தம் பழக்கங்களையும் வழிபாடுகளையும் மேற்கொண்டாலன்றித் தமக்கு வாழ்வில்லை எனக் கண்ட பிறகு அவர்தம் கடவுளையும் தமது வேதத்தில் போற்றத் தொடங்கினர். காலப்போக்கில் வேதம் பலர் கூட்டுறவால் வளர வளர, முதல் முதல் இவர்களெல்லாம் கடவுளாக அதர்வண வேதத்தில் X :7ல்) போற்றப்படுகின்றனர். எனவே, கி.மு. 1500ல் இந்தியாவில் கால் வைத்த ஆரியர் முதலில் தம் கொள்கைகளையும் பழக்க வழக்கங்களையும் அங்கே வாழ்ந்த பழைய மக்களின்மேல் ஏற்றக்கருதி முயன்று போரிட்டு, முடியாத காரணத்தால் சிலவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டி வந்தது. எனவே, இன்று ஆரியர் கொள்ளுகின்ற அனைத்தும் அவர்களுடையனவென்றும், திராவிடருடைய மொழி, கலை, வாழ்வியல் முதலியன அதில் கலக்கவில்லை என்றும் கூறமுடியாது என்பதைத் தெளிந்த வரலாற்று ஆசிரியர்கள் திட்டமாகக் காட்டியுள்ளார்கள். தமிழ் மொழி வரலாற்றைப் பற்றி எழுதிய ‘வி. கோ. சூரிய நாராயண சாஸ்திரியார்’ அவர்கள், 'தமிழரிடத்திருந்த பல அறிவியல்களையும் மொழிபெயர்த்து தமிழர் அறியுமுன்னரே அவற்றைத் தாம் அறிந்தன போலவும், வடமொழியினின்று தமிழுக்கு அவை வந்தன போலவும்