தொல்காப்பியத்துக்கு முன்னும் பின்னும்
119
காட்டியுள்ளனர்,[1] என விளக்கி இக்கருத்தை வலியுறுத்தியுள்ளார்கள். ஏறக்குறைய வடநாட்டில் மாறாட்டங்களைப் பெற்ற இந்தக் காலத்தை ஒட்டித்தான் தமிழ்நாட்டில் தொல்காப்பியம் தோன்றிற்று.
இவ்வாறு தொல்காப்பியம் தோன்றிய இன்றைக்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் தமிழ் இனத்தவர் மட்டுமே வாழ்ந்தனர் எனக் கொள்ள முடியுமா? மேலை நாடுகளிலிருந்தும் கீழை நாடுகளிலிருந்தும் பலர் தமிழ்நாட்டில் அக்காலத்திலேயே குடியேறியிருக்க முடியும். அன்றி, வாணிபத்தின் பொருட்டாவது அவர்கள் இந்நாட்டுக்கு வந்திருக்க முடியும். எகிப்திய தலைநகரம் தொல்காப்பியர் காலத்துக்கும் முந்தியதாகும். உரோம, கிரேக்க நாகரிகங்களே யவன நாகரிகம் என்ற பெயரோடு தமிழ்நாட்டில் நெடுங்காலப் பழக்கத்தில் வந்துள்ளன. இதே நிலையில் அன்றைக்கு ஒரு சில ஆண்டுகளுக்குமுன் வடவிந்தியாவில் நுழைந்த ஆரியருள் ஒரு சிலர் தொல்காப்பியர் காலத்தில் தமிழ்நாட்டுக்கும் வந்திருக்கலாம். எனவே, பல வேற்று மொழியாளரும் பண்பாட்டாளரும் தமிழ்நாட்டில் அக்காலத்தில் கலந்து வாழ்ந்தனர் என்பதில் ஐயமில்லை. என்றாலும், அவருள் ஆரியர் இந்நாட்டு நல்லியல்புகளைக் கொண்டு சென்று தம் இலக்கியத்திலும் வாழ்விலும் அமைத்துக்கொண்டனர். பின் காலம் அவர் தம் சார்பிலிருந்ததால், வடக்கிலிருந்து வந்த தென்னாட்டு, ஆதிக்கத்தைக் கைப்பற்றி வளர்ந்தகாலத்து, இங்கிருந்து கொண்டு சென்று உடன் திருப்பிக் கொண்டு வந்தனவற்றையே முதல் என்றும், தமிழ்நாட்டுத் தொன்மைச் சிறப்புக்களை வழி என்றும் செய்ய முயன்றனர். ஒரு சில வற்றுள் அவர்கள் வெற்றி பெற்றார்கள் என்றாலும், அவ் வெற்றி நிலைபெறாததோடு, பிறவற்றின் உண்மைகளும்
- ↑ தமிழ் மொழி வரலாறு ப. 15.