126
வரலாற்றுக்கு முன்
அனுப்பச் செய்யும் சடங்குகளும் அவர்களுக்கெனக் கட்டிய ‘பிரமிடு'களும் (கோபுரங்களும்) சமய அடிப்படையில் உண்டாயினவே[1] அப்படியே தமிழ்நாட்டிலும் பழங்காலத் தொட்டே சமயநெறி போற்றப்பட்டு வந்தது. சிவன், திருமால், முருகன், கொற்றவை போன்ற தெய்வங்கள் தமிழர் அல்லது திராவிடர் கடவுளர்களே என ஆராய்ச்சியாளர் கூறுவர்[2]. வடக்கே ஆரியர் இந்திரன், அக்னி போன் றோரைக் கடவுளராகவும் தம் வெற்றிக்குத் துணை செய்பவராகவும் கொண்ட அந்த நாளிலேதான் தொல்காப்பியத்திற் கண்ட கடவுள் நெறி தமிழ்நாட்டில் போற்றப் பெற்றது. அனுப்பச் செய்யும் சடங்குகளும் அவர்களுக்கெனக் கட்டிய 'பிரமிடு'களும் (கோபுரங்களும்) சமய அடிப்படையில் உண்டாயினவே[3] அப்படியே தமிழ்நாட்டிலும் பழங்காலத் தொட்டே சமயநெறி போற்றப்பட்டு வந்தது. சிவன், திருமால், முருகன், கொற்றவை போன்ற தெய்வங்கள் தமிழர் அல்லது திராவிடர் கடவுளர்களே என ஆராய்ச்சியாளர் கூறுவர்[4]. வடக்கே ஆரியர் இந்திரன், அக்னி போன்றோரைக் கடவுளராகவும் தம் வெற்றிக்குத் துணை செய்பவராகவும் கொண்ட அந்த நாளிலேதான் தொல்காப்பியத்திற் கண்ட கடவுள் நெறி தமிழ்நாட்டில் போற்றப் பெற்றது.
'கொடிநிலை கந்தழி வள்ளி என்ற
வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும்
கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே.' (புறத். 27)
என்னும் தொல்காப்பியச் சூத்திரத்தில் தமிழர் கடவுள் வாழ்த்தியல் முறை ஓரளவு விளக்கப்படுகின்றது. இவற்றுள் கந்தழி என்ற யாதொரு பற்றுக்கோடுமற்று அனைத்துக்கும் அப்பாலாய் உள்ள ஆண்டவனை வழிபடும் சிறப்புடன், கண்ணில் தோற்றும் சூரியனையும், சந்திரனையும் வழிபட்டார்கள் எனப் பொருள்பட நச்சினார்க்கினியர் உரை வகுத்துள்ளார். எனவே, கடவுள் நெறி அப்பாலுக்கப்பாலாய ஊர் பெயர் ஒன்றுமற்ற இறைவனைப் பற்றியது என்றும், அதே வேளையில் உலகுக்கு ஒளியும், மழையும், பிற தேவைகளையும் அளிக்கும் கதிரவனையும் திங்களையும் தமிழர்கள் போற்றினார்கள் என்றும் கொள்ள வேண்டியுள்ளது. சிலப்பதிகாரத்தில் முதலில் வாழ்த்தாக ஞாயிறு, திங்கள், மழை இவற்றைப் போற்றுவதும் இந்த அடிப்படையிலேதான் போலும்!