132
வரலாற்றுக்கு முன்
ஓங்கி இருக்கவில்லை என்பதும் தேற்றம். அன்றி, அது அப்படியே அவர்தம் கரணம் என்று கொள்வதிலும் இழுக்கில்லை, நாட்டில் அவர் புகுந்த நிலையையும் கரணம் புகுத்திய நிலையையும் இச் சூத்திரங்கள் விளக்கு கின்றமையின்.
இன்னும் ஆரியர் கருத்துக்கள் சில தொல்காப்பியத்தில் கூறப்பட்டிருப்பது உண்மையே. 'வானோர் அமுதம் புரையுமால்' (கற். 5) என அமிர்தம் குறிக்கப்பெற்றுள்ளது
'மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம்
கீலோர்க் காகிய காலமும் உண்டே.' (கற். 3)
என நால்வகை மக்கட் பாகுபாடு பேசப்பெறுகின்றது. மரபியலில் அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்ற நால்வகைப் பிரிவும் அவரவர் வாழ்வு முறையும் பிறவும் பேசப் பெறுகின்றன.
'நூலே கரகம் முக்கோல் மணையே
ஆயும் காலை அந்தணர்க் குரிய,’ (மரபு 66)
என அந்தணரையும் அவர்தம் பொருளையும் இதில் குறிக்கின்றார் தொல்காப்பியர். இது ஆரியரைக் குறிக்கும் என்பர் சிலர். எனினும், அந்தணர் என்பது தமிழ்நாட்டுச் செந்தண்மை பூண்டொழுகும் ஒழுக்க சீலரையே குறிக்கும் சொல் என்பதும், வள்ளுவரும் பிறரும் இதை அதே பொருளில் எடுத்தாளுகின்றனர் என்பதும் காணலாம். தமிழ் நாட்டிலும் அறிவர், தாபதர் போன்ற நல்ல உள்ளமும் பண்பும் அருளும் உடைய துறவியரும் பற்றற்றவரும் வாழ்ந்து வழி காட்டியுள்ளார்கள் எனக் காண்கின்றோம். அவருக்கு நூல் ஆகிய அறச்சுவடியும், பிறவும் இருந்திருக்கலாம். எனவே, அவரையே குறித்தன. இவை எனக் கொள்வதில் தவறு இல்லை. இவரே மற்றோர் இடத்தில்,
'பார்ப்பார் அறிவர் என்றிவர் கிளவி
யார்க்கும் வரையார் யாப்பொடு புணர்ந்தே.' (செய் 189)