உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

140

வரலாற்றுக்கு முன்


ஆனால், அவன் தனி அரசனாய் இல்லை. அரசன் தன் மக்கள் அரசியல் அறிவுபெற அவர்களை இளவரசராக்கி அமர்த்தும் வழக்கம் உண்டல்லவா? “வேல்ஸ் இளவரசர்” (Prince of Wales) இருந்ததை நாம் அறிவோம். பிற்காலச் சோழர் காலத்தில் தந்தை அரசாளும்போதே மகனை இளவரசனாக்கியிருப்பதைத் தொடர்ந்து காண்கின்றோம். இவ்வாறு ஒரே அரசாகப் பாண்டியர் இருந்தனரே அன்றி, ஐவர் பாண்டியராய் அந்தப் பழங்காலத்தில் இருந்ததற்குச் சான்றுகள் கிடைக்கவில்லை. சேரன் செங்குட்டுவன் காலத்தில் சோழ நாட்டில் ஒன்பது மன்னர் இருந்ததாகக் காண்கின்றோம். சேரர் மாபெரிய இரு கிளையாய் இருந்ததை அறிகிறோம். எனினும், ‘மார்க்கோபோலோ’ காலம் தவிர்த்து வேறு எக்காலத்தும் பாண்டியர் ஐவராய் இருந்ததில்லை.

இனி ஐவரைப் பாண்டிராக்கி, ஈரைம்பதின்மரை நூறு சேனைத் தலைவர் எனவும் கொள்கின்றனர். மற்றும், ஈரைம்பதின்மர் ஈரொன்பதின்மராக இருக்கலாம் என எண்ணிப் பதினெட்டுச் சேனைத் தலைவர் எனவும் கொள்கின்றனர். இவ்வாறு கொண்டு ஐவர் பாண்டியருடனே சினம் கொண்டு, அவர்தம் பதினெட்டுச் சேனைத் தலைவரும் படும்படி பெருஞ்சோறு அளித்தவன் உதியன் எனக் காட்டுகின்றனர். இது பொருந்துமா? ஐவர் பாண்டியர் என்பது பொருந்தாது என்பதைக் கண்டோம். அவர்களுக்குப் பதினெண்மரோ அன்றி நூற்றுவரோ சேனைத் தலைவர் இருந்தார்களென்றோ, அவர்களை வென்ற படை என்றோ, பொருள் கொள்வது சிறவாதன்றோ? தமிழ் இலக்கியங்களில் பெரும்பாலும் மன்னரோடு நேர்நின்று அம் மன்னர்களை வெற்றி கொள்வதையும், அவர்தம் நாட்டை எரியூட்டுவதையுமே பெருமையாகப் புலவர்கள் பாடியிருக்கிறார்களே ஒழிய, அவர்தம் சேனைத் தலைவரை வென்ற பெருமையைப் பேசவில்லை. அப்படிப் பேசுவதும் அவர்தம் புகழுக்கு இழுக்கே