உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சோறளித்த சேரன்

141


யாகும். எனவே, சேனைத் தலைவரை வென்றவருக்குச் சோறு அளித்தான் என்பது பொருந்தாது. மற்றும் இதில் யாருக்கு அளித்தான் என்பது விளக்கமாகவில்லை. தனது சேனைக்கு அளித்தான் என்றே கொள்ளவேண்டும் போலும்! ஆம்! அதற்காகத்தான் தொல்காப்பியப் பெருஞ்சோற்று நிலையும், புறம் பொருள் வெண்பா மாலையும் மேற்கோளாகக் கொண்டு காட்டப்பெறுகின்றன. அவற்றையும் பொருந்துமா என ஆராயலாம்.

தொல்காப்பியத்திலும், புறப்பொருள் வெண்பா மாலையிலும் வரும் பெருஞ்சோற்றுநிலை, வஞ்சித்திணையில் இடம் பெற்றுள்ளது. சேனை போர்மேல் மண் குறித்துப் புறப்படுமுன் அதைச் சிறப்புப்படுத்தவும், அச்சேனை சிறக்கச் செயலாற்றவும் கருதி அதற்குச் சோறு இட்டுச் சிறப்பித்துப் போற்றிப்புகழ்ந்து வாழ்த்தி அனுப்புதல் மன்னர்தம் கடனும் முறையுமாகும். இதைத்தான் இரு நூல்களும் குறிக்கின்றன. அன்றித் தும்பைத் திணையில் பெருஞ்சோற்று நிலை இல்லை. நம் புறநானூற்று அடியிலோ பொலம்பூந்தும்பை என்றே குறிக்கப் பெற்றுள்ளது. எனவே, தும்பை சூடிப் போர் செய்வார் இடையில் வழங்கிய சோறுதான் இதில் குறிக்கப் பெறுவது. ஆக, பாண்டவரும் கெளரவரும் செய்த போருக்கு இடையில் யாதொரு வேறுபாடும் இன்றி இருவருக்கும் உணவு வழங்கினவன் உதயன் சேரலாகும். இருவருக்கும் சோறு வழகுவது பொருந்தாது என்பர் சிலர். அதுவே பொருந்துகின்றது என்பது நான் முன் விளக்கிய செஞ்சிலுவைச் சங்கத் தொண்டின் மேற்கோளால் நன்கு விளங்கும். போர்க்களத்தில் நடுவுநின்று இரு சாராரிலும் அற்றார்க்கும் அலந்தார்க்கும் உற்றுழி உதவுதல் மிகச் சிறந்த அறமல்லவோ!

மற்றும் தொல்காப்பியமும் வெண்பாமாலையும் அரசன் தன் சேனைக்குச் சோறு அளித்தலையே குறிக்கின்றன. ஆனால், அதை ஒரு மன்னன் பெருமையாகக் கருதிக் கொள்வதும், அந்தப் பெருமையை ஒரு புலவர் பாட்டாகப்