உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

142

வரலாற்றுக்கு முன்


பாராட்டுவதும் மரபு அல்ல. தனது சேனைக்கு உணவு அளித்தல் அரசன் கடன். இன்றும் நம் நாடு உட்பட உலகில் பாதுகாப்புப் படைக்குச் செலவு செய்வதுதானே நீதியாகக் காண்கின்றோம்? அதிலும் வீரர்கள் உயிரைப் பணயம் வைத்துப் போருக்குப் புறப்படும்போது—அவன் வாழ அவர்கள் மடியப் புறப்படும் போது—எல்லா வகையான சிறப்புக்களையும் செய்து அவர்களை வழி அனுப்புவது மன்னன் கடமையாகும—தலை சிறந்த கடமையாகும். அந்தக் கடமையைத் தன் புகழாக ஒருவன் கருதுவானாயின், அவன் புலவரால் போற்றப் படுவானோ? அவ்வாறு அவனைப் போற்றும் புலவரும் புலவராவாரோ? அப்படிப் போற்றினாலும், அப்பாடல் கால வெள்ளத்தைக் கடந்து இத்துணை நாளும் வாழுமோ? எண்ணிப் பார்க்கவேண்டும். எனவே, சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் கைம்மாறு கருதாது. போர்க் காலத்து வாடுபவருக்கு உதவ வேண்டும் என்ற பரந்த நோக்கத்தோடு, பாரதப் போரில் நின்று, இரு திறப் படைகளுக்கும் இறுதி வரையில் சோறு அளித்துச் சிறந்தான் என்று சொல்வதில் தவறு ஒன்று மில்லையன்றோ! தன் சேனைக்குக் கொடுப்பதினும் மற்றவர் சேனைக்கு - மாறுபாடு இல்லாத வகையில் இருவருக்கும் - வரையாது கொடுத்தல் சிறந்த செயல் அன்றோ? அச்செயலே அவனை இன்றளவும், எத்தனையோ மக்கள் இறந்தும்—அவன் பின் வந்த பெருமன்னர் மறைந்தும்—வாழ வைக்கின்றது, அவன் வாழ்க!’ என்று நாமும் வாழ்த்துவோம்.

இனிப் பாண்டியருடன் போர் நேர்ந்ததற்குக் காட்டும் காரணம் எண்ணிப் பார்க்க வேண்டுவதாகும். இவன் முதலில் சோழனை வென்றானாம் அது கண்ட பாண்டியர் தம் நாட்டுக்கு நலிவு வரும் என அஞ்சி, ஒன்றுசேர்ந்து இவனை எதிர்த்தார்களாம். இது எப்படிப் பொருந்தும்? இவன் அரசியல் அறிவு பெற்றவனாயின், சிறுசிறு நிலப்பகுதி