146
வரலாற்றுக்கு முன்
'பாஅல் புளிப்பினும் பகல் இருளினும்
நா அல் வேத நெறி திரியினும்
திரியாச் சுற்றமொடு முழுதுசேண் விளங்கி
நடுக்கின்றி கிலியரோ அத்தை—அடுக்கத்துச்
சிறுதலை கவ்விப் பெருங்கண் மாப்பிணை
அந்தி அந்தணர் அருங்கடன் இறுக்கும்
முத்தீ விளக்கின துஞ்சும்
பொற்கோட்டு இமயமும் பொதியமும் போன்றே! (17.24)
என்று வாழ்த்துகிறார் புலவர்; மன்னன் இமயத்தையும் பொதியிலினையும் ஒத்து வாழ வேண்டும் என்கின்றார். ஆம்! அவன் வாழ்கின்றான்; இன்னும் அவை வாழும் வரையில் வாழ்வான் என்பது உறுதி. உலகம் நிலை கெட்டு ஒழுகலாறு நிலைகெடினும் அவன் சுற்றத்தோடு நெடுந்தொலைவு புகழ்பெற்று விளங்க வேண்டுமென வாழ்த்து கின்றார் புலவர். அக்காலத்தில் இமயமும் பொதியிலும் தமிழருக்கு ஒன்றாகவே காட்சி தருகின்றன. இமயத்து அந்தணர் அருங்கடனும், அருகே மான் துஞ்சும் இயற்கையும் அவர் உள்ளத்தைப் பிணிக்கின்றன. ஆம்! அப்புலவர் அவனுடன் அங்கே சென்று உடனிருந்து ஆரியர் துவன்றிய பேரிசை இமயம் கண்டு, அவன் சோறிட்ட ஏற்றத்தையும் கண்டு பாராட்டியவராதல் வேண்டும் எனக் கொள்வது மிகவும் பொருந்துவதாகும்.
இனி, இமயம் பற்றி எண்ணும்போது, மற்றொன்றும் தோன்றுகிறது; சேரர்களுக்கு இமயவரம்பன்', 'வான வரம்பன்' என்னும் பெயர்கள் இருப்பதைப் பற்றியும் அறிஞர் ஐயம் கொள்ளுகின்றனர்; 'இமயத்தை எல்லையாக உடையவன்', 'வானத்தை எல்லையாக உடையவன்' எனப் பொருள் கொள்ளுதல் தவறு என்கின்றனர். இது எப்படி பொருந்தும்? அவ்வாறு அரசாண்ட மன்னரே இல்லை என்கின்றனர். 'குமரியொடு வட இமயத்து ஒரு மொழி வைத்து உலகாண்ட சேரலாதன்' என்ற இளங்கோவடிகளின் உரை பொருளுரை அன்றோ! கயலெழுதிய இமய