12
வரலாற்றுக்கு முன்
எல்லை வரையில் உள்ள இன்றைய பகுதிகளை வைத்து மனித இனம் வளர்ந்த வரலாற்றை ஆராய்கின்றார்கள் நல்லாசிரியர்கள். தென்னிந்தியாவிற்கும் மத்தியத்தரைக் கடற்பகுதிக்கும் பல வகையில் ஒற்றுமைகள் இருப்பதைக் காண்கின்றோம். எகிப்திய, கிரேக்க, ரோம நாடுகளின் நாகரிகத்துக்கும், பழந்தமிழ் நாட்டு நாகரிகத்துக்கும் பல்வேறு தொடர்புகள் உள்ளன என வரலாற்று ஆராய்ச்சி விளக்குகின்றது. கிரேக்கர் தம் பழைய மொழியில் தம்மைத் ‘தமிலி’ (Tamili) என்றே வழங்கிக்கொண்டார்கள்.[1] திராவிடம், தமிழ் என்ற இரண்டு சொல்லையும் ஆராய்ந்த திராவிட மொழிகளின் ஒப்பிலக்கண ஆசிரியர் தென்னாட்டுத் ‘தமிழ்’ அமைப்பை நன்கு விளக்கி, அம்மொழி பேசுவோரைத் தமிழர் எனவே வழங்குவதோடு, அவர்களைத் தொன்மை வாய்ந்தவர்கள் எனவே குறிக்கின்றார்.[2] கிரேக்க நாட்டில் ‘ஹெலன் கால’ எல்லைக்கு முன் இந்திய மக்களைத் ‘தமிலி’ (Tamil) எனவே வழங்கியுள்ளார்கள்.[3] இந்த ஆராய்ச்சியின் அடிப்படையில் திரு. சட்டர்ஜி அவர்கள் சில திராவிடக் குடும்பங்களாவது மத்தியத்தரைக் கடலில் இன்றைக்கு இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்திருக்க வேண்டும் என்று திட்டமாக வரையறுக்கின்றார்.[4] எனவே, இந்திய நாட்டுத் தொன்மையான வரலாற்றையும் அதனுடன் தொடர்புடைய மத்திய ஆசியா, மத்திய தரைக்கடல் பகுதி ஆகியவற்றின் வரலாற்றையும் ஆராயும்போது தென்னாட்டு வரலாறு முக்கிய இடம் பெற வேண்டும் என்று ஸ்மித்து போன்றவர்கள்