உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இராமனும் இராவணனும்

149


எனவும், இராமாயணம் மிக மிகப் பிந்தியதெனவும் காட்டுவர்[1]. இவரைப் போன்றே வேறு ஆசிரியர் சிலரும் குறித்துள்ளனர்[2]. எனினும், சிலர் இராமாயணமே காலத்தால் முந்தியதெனக் காட்டுகின்றனர். பின்னதினும் முன்னதே வலியுடைத்தென்பது பலருடைய வாதமாகும். பரதனுடைய வமிசத்தவரே பாரதர் என்பதும், அப் பரதன் வழியே இந்தியா பாரத நாடு என வழங்கப்பட்டதென்பதும் எனவே அப் பரதனுடைய பரம்பரையை விளக்கிக்காட்டும் பாரதமே முற்பட்டதென்பதும் பலர் காட்டும் ஏற்புடைக் காரணங்களாகும், வேதத்திலும் இராமாயணத்தைக் காட்டிலும் பாரதமே முன்னால் குறிக்கப்பெற்றுள்ளது[3] . மற்றும், இராமாயணம் எழுதிய வான்மீகியாரது காலம் விண்டர் நிட்ஸ் என்பவரால் கி. மு மூன்றாம் நூற்றாண்டெனத் தீர்மானிக்கப்படுகிறது[4]. ஆனால், பாரதத்தின் காலமோ, கி. மு. பதினான்காம் நூற்றாண்டாக இருக்க வேண்டுமென்று இராய் செளதிரி அவர்கள் பல ஆதாரங்களைக் கொண்டு ஆராய்ந்து, அறுதியிடுகின்றார்[5].” வின்சென்ட் ஸ்மித்து அவர்கள் இரண்டும் ஏறக்குறைய ஒரே காலத்தனவாகத்தான் இருக்க வேண்டுமென்றும், பாரதத்தின் பெரும்பகுதி கி. பி. 200லே தான் எழுதப் பெற்றிருக்க வேண்டுமென்றும், இராமாயணத்திலும் சில பகுதி வான்மீகியால் எழுதப்படவில்லை என்றும் காட்டி


  1. Pre-Historic, Ancient and Hindu India, by Banerji, p. 47.
  2. Cambridge History of India Vol. I.
  3. History of India, by Sinha and Banerji, p. 45
  4. A History of India, by Winternitz, Vol. I.
  5. Political History of Ancient India, by Hemchandra Raychaudhrl p. 20