பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இராமனும் இராவணனும்

151


'இமையவில் வாங்கிய ஈர்ஞ்சடை அந்தணன்
உமைஅமர்ந்து உயர்மலை இருந்தன னாக
ஐயிரு தலையின் அரக்கர் கோமான
தொடிப்பொலி தடக்கையின் கீழ்புகுத்து அம்மலை
எடுக்கல் செல்லாது உழப்பவன் போல, என்று

                                 (கலி. 38 : 1-5)

கலித்தொகை இராவணன் கயிலையை எடுக்க நினைத்த திறனை விளக்கிக் காட்டுகின்றது. இவ்வாறே பல பாரதக் கதைகளும் சங்க இலக்கியத்தில் காட்டப்பெறுகின்றன. பாரதப் போரில் சோறிட்டுப் புகழ் பெற்ற சேரமன்னனைப் பற்றி இந்நூலின் மற்றொரு கட்டுரை நன்கு விளக்கிக் காட்டுகின்றது இன்னும் அரக்கு இல்லில் தீ வைத்ததையும் (கலி. 25 : 1-4), கன்னன் சூரியன் மகன் என்பதையும் (கலி. 108 : 13), திரெளபதியின் கூந்தலைத் துச்சாதனன் பிடித்து இழுத்ததையும் (கலி. 101 : 13), வீமன் அரக்கு மாளிகையிலிருந்து ஐவரைக் காத்ததையும் (கலி. 25 : 7-8). வீமன் துரியோதனன் தொடையை முறித்து உயிர் குடித்ததை யும் (கலி. 52 : 2, 3) கலித்தொகை வாயிலாகக் காணலாம். இவை பற்றிய ஆராய்ச்சிகளெல்லாம் ஈண்டு நமக்குத் தேவை இல்லை. இவையெல்லாம் கடைச்சங்ககாலத்திலேயே வட நாட்டு இரு பெருங்கதைகளும் தமிழ்நாட்டு மக்களுக்கு அறிமுகமாய் இருந்தன என்பதைக் காட்டுகின்றன.

இனி இராமாயணத்தில் வரும் இராமனையும் இராவணனையும் எண்ணிப் பார்த்தலே, இங்கு நான் செய்ய விழையும் பணி. இராமன் வடக்கிலிருந்து தெற்கே வந்தவன். இராவணன் தெற்கே ஒரு தீவில் ஆண்டவன். தெற்கே வந்த இராமனுடைய மனைவியை இராவணன் தூக்கிக்கொண்டு செல்ல, அதனால் போர் மூள, இராவணன் சுற்றத்தோடு கொல்லப்பட, இராமன் தன் மனைவியை மீட்டுச் சென்றான். இதுதான் இராமயணக் கதையின் அடிப்படை. சாதாரணமாக யாரும் வடக்குத் தெற்கு என்றதும் ஆரியர் திராவிடர் என்றே எண்ணிவிடுகின்றனர்;