152
வரலாற்றுக்கு முன்
இராமனை ஆரியன் என்றும் இராவணனைத் திராவிடன் என்றும் கூறிவிடுகின்றனர்; அதனால், வரலாற்றுக் காலத்துக்கு முன் நாடறியாத ஆரிய திராவிடப் போராட்டம் இருந்ததாக எண்ணி மாறுபடுகின்றனர். அதனால் பல சொற்போர்களும், கொள்கை மாறாட்டங்களும் நிகழ்கின்றன. சாதாரண மக்கள் மட்டுமின்றித் தெளிந்த வரலாற்று ஆசிரியர் சிலரும் இந்த வழியில் தவறிவிடுகின்றனர். வரலாற்றுக்கு முற்பட்ட இந்தியாவைக் காட்ட வந்த பானர்ஜி அவர்கள், இராமனுடைய மனைவியை ஒரு திராவிட மன்னன் கொண்டு சென்றான் எனவே குறிக்கின்றார்[1]. மேலைநாட்டு ஆராய்ச்சியாளர் சிலர் இராமாயணம் வடநாட்டிலிருந்து தென்னாட்டுக்குக் குடியேறிய ஆரியர் வரலாற்றை விளக்கும் கற்பனைக் காவியம் போன்றது எனக் கூறுகின்றனர்[2]. இவ் வரலாற்று ஆசிரியர்களும் இவ்வாறு வழங்குவதற்குக் காரணம் வடக்குத் தெற்கு என்னும் திசை மாறாட்டமேயன்றி வேறு அன்று.
ஏழாம் நூற்றாண்டில் சமயத்தைப் பரப்பிய ஞானசம்பந்தர் தம்மை வேதம் காக்கத் தோன்றியவராகவே பாடுகிறார். அவருடைய பல பாடல்களில் வேதம் பற்றியும், வேள்வி பற்றியும், அவற்றைப் பழிப்பார் கொடுமைகளைப் பற்றியும் கூறப்பட்டுள்ளன, அவர் வாய் மொழிப்படி அவரை ஆரிய மரபினர் எனக் கொள்ளவேண்டியுள்ளது. அவர் தம்மைத் தமிழ் விரகன், தமிழ் ஞானசம்பந்தன் என்றெல்லாம் போற்றிக்கொண்டாலும், அவர் வேதத்தைக்