பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

156

வரலாற்றுக்கு முன்




'துங்கமலி பொதித்தென்பால் தொடர்ந்தஅடி வாரத்தில்
அங்கனக இலங்கையுமேழ் வரைச்சாரல் அடித்தேசம்'

என்பன அவ்வடிகள். இதன் உரையாசிரியர், மகேந்திர மலையின் அடிவாரத்திலுள்ள கனக மயமான இலங்கையின் பகுதி கடலுள் மறைந்ததென்று கூறப்பட்டுள்ளது' எனக்காட்டுகின்றார். இராமாயண காலத்திலோ, மகேந்திரத்திற்கும் இலங்கைக்கும் நடுவில் கடல் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது. (கிட்கிந்தா காண்டம்). இன்றும் பொதிய மலைக்குத் தெற்கே அத்தகைய மலை ஒன்றும் இல்லை என்பதை நாம் அறிவோம். எனவே, அது கடலூழிகளுள் மறைந்திருக்க வேண்டும். இலங்கையும் அவ்வாறே அழிவு பெற்றிருக்க வேண்டும். இராவணன் வாழ்ந்த இலங்கைக்கும் இன்றைய இலங்கைக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. வான் வழிப் பறக்கும் ஆற்றலும் மாயச் செயல் வல்ல தீரமும் பெற்ற ஆரிய நாட்டு இராவணன், வடக்கிருந்து வான் வழி வந்து யாரும் நுழைய முடியாத ஒரு தெற்குத் தீவின்கண் தன் நாட்டை அமைத்துக்கொண்டான் என்பதே பொருத்தமானதாகும்.

திரு. வி. கோ. சூரியநாராயண சாத்திரியார் அவர்கள் ஆரியர் கைபர் கணவாய் வழியாக இந்தியாவில் புகுமுன்னரே, மேலை நாட்டு ஆரியர்களோடு அரபிக் கடல் வழியே தமிழர் வாணிபம் செய்தனர் எனக் குறிக்கின்றார்[1]. அவ்வாறு தொடர்பு கொண்ட ஆரியருள் சிறந்த வீரன் அராபிக் கடல் வழியாகத் தெற்கேயுள்ள ஒரு தீவிற் புகுந்து, தன் ஆணையைச் செலுத்திச் சிறந்து விளங்கினான் என்று கொள்வதிலும் தவறு இல்லை. (சாத்திரியார் கொள்கைப்படி ஆரியர் ஐரோப்பாக் கண்டத்து ஸ்காந்திநேவியாவிலிருந்து வந்தவராவர்.) எனவே, ஒரு பிரிவு தரை வழி வடவிந்தியாவுக்கும். ஒரு பிரிவு கடல் வழி இலங்கைக்கும்



  1. தமிழ் மொழி வரலாறு, பக், 9, 10.