உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வடக்கும் தெற்கும்

13


திட்டவட்டமாகக் கூறுகின்றார்கள்[1]. இவற்றையெல்லாம் நோக்கும்போது மத்திய தரைக்கடற் பகுதியிலிருந்து குமரி முனை வரையில் ஒரு காலத்தில் ஒரே இன மக்கள் இருந்தார்களோ என எண்ண வேண்டியுள்ளது

இன்று இந்திய நாட்டு வரலாற்றை ஆராய்கின்ற பலர் ஆரிய திராவிட மாறுபாட்டையே முக்கியமாகக் குறிக்கின்றனர். சிலர் இந்த அடிப்படையில் பல வரலாற்றுக்கு ஒவ்வாத புதுப்புதுக் கருத்துக்களைத் தத்தம் ஏடுகளில் எழுதிவிடுகின்றனர். சிலர் இந்த அடிப்படையிலே நாட்டில் பலப்பல பிரிவுகளை உண்டாக்குகின்றனர். இந்த உணர்வெல்லாம் சற்று ஒய்ந்து சிந்தித்துப் பார்ப்பின், பல நல்ல உண்மைகள் உலகில் விளங்காமற் போகா. குமரி முதல் இமயம் வரையில் இன்று இணைந்துள்ள பரந்த இந்தியா, கடந்த ஐயாயிரமாண்டுகளிலோ, அதற்கு முன்போ இருந்த நிலையை ஒருவாறு உணர இன்று வரலாற்றுக் குறிப்புக்கள் அதிகம் உள்ளன. அவற்றின் வழி ஆராய்ந்தால், பல நல்ல உண்மைகளும் மறுக்க முடியாத பல முடிவுகளும் பெற முடியும் என்பது உறுதி. அத்துறையில் நாமும் ஓரளவு துருவி ஆராய்வோம்:

ஆரியர்கள் வடமேற்குக் கணவாய் வழியாகச் சிந்து வெளியில் குடியேறிய காலம் ஐயத்துக்கு இடமின்றி அறுதி செய்யப்பட்டுவிட்டது. அதாவது, அவர்கள் கி.மு. 1500ல், இன்றைக்குச் சுமார் 3500 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிற்கு வந்தவர்கள் என்பதாகும். அவர்கள் சிந்து வெளியில் வந்து மெள்ள மெள்ளக் கங்கைச் சமவெளியிலும் குடியேறித்


  1. Smith rightly observed many years ago, “Early Indian History, as a whole, cannot be reviewed in the perspective until the Non-Aryan institutions of the south receive adequate treatment.”-History of India, (Sinha & Banerji) p. 26.