இராமனும் இராவணனும்
159
இரட்சகர் நாடு ஒரு சிறந்த நாடு (Welfare State) என்கின்றார். இவ்வாறு அகத்தியர் இராமனுக்குப் பஞ்சவடியில் விளக்கிக் காட்டி அவனைத் தென்னாட்டுக்கு அனுப்பினாராம். இது கம்பர் நூலிலில்லை. வான்மீகத்தில் உள்ளது போலும்! எப்படியாயினும், அக் கருத்துச் சரி என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. இராவணன் சீதையைக் கொண்டு சென்ற ஒரு சொடுமையைத் தவிர, வேறு ஒரு கொடுமையும் செய்தறியாதவன் என்பதைக் கம்பரே தம் வாக்கால் விளக்கிக் காட்டுகிறார். அதையும் கண்டு மேலே செல்லலாம்.
'வையம் தந்த நான்முகன் மைந்தன் மகன் மைந்தன்
ஐயன் வேதம் ஆயிரம் வல்லோன் அறிவாளன்
மெய்யன்பு உன்பால் வைத்துள தெல்லாம் வினை வென்றோன்
செய்யும் புன்மை யாதுகொல், என்றார் சிலரெல்லாம்’
(காட்சிப் படலம், 149)
என்பது கம்பர் வாக்கு. இதில் அவன் வினைகளையெல்லாம் வென்ற மேலோன் என்றும் சீதையைக் கவர்ந்ததே அவன் சிறு தொழில் என்றும் அரக்கியர் கூற்றாகக் கம்பர் காட்டிய உண்மை நன்கு புலனாகும்.
இப்பாட்டு வழியே கம்பர் இராவணன் புலத்தியன் மரபில் பிறந்தவன் என்ற உண்மையை நன்கு நிலை நாட்டு கின்றார். இராவணன் உலகத்தை உண்டாக்கிய பிரமன் வழி வந்தவன் என்றும், வேதங்களில் வல்லவன் என்றும் கம்பர் காட்டுகின்றார். இவ்வாறு பல இடங்களில் இராவணன் ஆரியன் என்பதைக் கம்பர் காட்டுவதை மேற்கோளாகக் காட்டினாலே அவனைப் பற்றிப் பலர் திராவிடன் எனக் கொள்ளும் பான்மை அகலும் என எண்ணுகின்றேன்.
கும்பகருணனிடம் வீடணன் போர் தொடங்குமுன் வருகிறான்; வந்து, அவனையும் தன்னைப்போல இராமனிடம் சரண் அடையுமாறு வேண்டுகின்றான்; இராமனைச் சரண் அடைந்தால், இலங்கையைப் பெறலாம் என ஆசை