160
வரலாற்றுக்கு முன்
ஊட்டுகின்றான். எனினும், கும்பகருணன் அதற்காக அவன் பக்கம் செல்ல விரும்பவில்லை. ஆயினும், புலத்தியன் வழி வந்த தனது பிரம மரபு கெடக் கூடாது என்பதே அவன் ஆசை. தம்பி வீடணன் இராமன் பக்கம் சென்றதால், தாம் அனைவரும் இறந்த போதும் அவன் வழி தமது மரபு தழைக்கும் என உணர்ந்தவன் அவன்; எனவே, எதிர்பாராது அங்கே போருக்கிடையில் அவனைக் கண்டதும் பதறுகிறான்; அவனும், போரிடையில் இறந்துவிட்டால் மரபு பொன்றுமே எனக் கவன்று பேசுகிறான்.
'குலத்தியல்பு அழிந்த தேனும் குமரமற்றுன்னைக் கொண்டே
புலத்தியன் மரபு மாயாப் புண்ணியம் பொருந்திற்று என்றுன்
வலத்தியல் தோளை நோக்கி மகிழ்கின்றேன்!
(கும்பகருணன் வதைப்படலம், 127)
எனக் கூறுகின்றான். இதிலும் அவர்கள் மரபு பிரம மரபு என்பது நன்கு காட்டப்பட்டுள்ளது. இனி மற்றோர் இடத்தில் கம்பர் பாடலுக்கு உரையெழுத வந்த வை.மு.கோபலாகிருஷ்ணமாசாரியார் அவர்கள், இராவணன் பிரம குலத்தவன் என்பதைத் தமது உரை மூலம் நன்கு நிலை நாட்டுகின்றார். சுந்தர காண்டத்து ஊர் தேடு படலத்துள் வரும் ஒரு பாடலுக்கு அவர் எழுதும் உரையைக் காண்போம்.
'முழுவா னவரால் உலகமொரு மூன்றும் காக்கும் ழுதல்தேவர்
மழுவாய், நேமி, குலிசத்தின் வாய்மை துடைத்த மார்பானை’
(ஊர்தேடு படலம், 216)
என்பது கம்பர் வாக்கு. இதற்குச் சிறப்புரை கூற வந்த உரையாசிரியர், 'திரி மூர்த்திகளுள் போர் முயற்சி இல்லாது வேதம் ஒதிக்கொண்டிருப்பவனும் இராவணனது குலத்துக்கு ஆதி புருஷனுமான பிரமனை நீக்கி, இந்திரனைக் காட்டி, அம்மூவரது படைக் கலங்களும் இவனது மார்பில் பட்டு அதனை ஊறுபடுத்த மாட்டாமல் சிறப்பிழந்தன என இராவணனது மார்பின் வலியை வருணித்தார்'. (சுந்தர