நந்தரும் மெளரியரும்
163
எனவே, தென்னாட்டு மக்களாகிய திராவிடர்கள். ஆரியர்கள் இந்திய எல்லையில் புகுந்த அந்த நாளிலேயே தங்களுக்கெனத் தனிப் பண்பாடும் நாகரிகமும் மொழியும் பெற்று வாழ்ந்தார்கள் என்பது அறியக் கிடக்கின்றது. வடநாட்டிலும் ஒரு காலத்தில் அவர்கள் பரவி இருந்தார்கள் என்பதைச் சிதைந்த சிந்துவெளி நாகரிகம் நமக்கு நன்கு காட்டுகின்றதன்றோ?
வருவிருந்து பார்த்திருந்து, வந்தவர்களுக்கு வழிவிட்டு, தம் வாழ்வைத் தென்னாட்டு எல்லையிலேயே அமைதியாக அமைத்துக்கொண்ட திராவிடர் - சிறப்பாகத் தமிழர் - வடவிந்தியாவில் ஆணை செலுத்தவில்லை என்று கொண்டாலும், அன்றுதொட்டு இன்றுவரை வடவிந்திய மக்களோடு பல வகையில் தொடர்புகொண்டே வாழ்ந்தனர் என்பது தெரிகின்றது. தமிழ்நாட்டு இலக்கியங்களும், வடநாட்டு வரலாற்றுக் குறிப்புக்களும் இவ்வுண்மையை நன்கு விளக்குகின்றன. அவற்றுள் ஒன்று, மெளரியரின் தென்னாட்டுப் படையெடுப்பாகும்.
கி.மு. ஏழாம் நூற்றாண்டிற்குப் பிறகு இந்தியாவில் சிறுசிறு அரசுகள் பல தோன்றலாயின. அவை தமக்குள் மாறுபட்டு போர் விளைத்துத் தம் ஆணையைப் பரப்ப முயன்று கொண்டிருந்தன. அதே வேளையில் மேலை நாட்டுக் கிரேக்க நாட்டிலிருந்தும், பாரசீகம் போன்ற பிர நாடுகளிலிருந்தும் சில அசுகள் வந்து இந்திய நாட்டில் தங்கள் ஆணையைப் பரப்ப முயன்றன. வடநாட்டுக்கு அரசியல் காரணமாக வந்த அந்த மேலை நாட்டினர் சிலர், வாணிபத்தின் பொருட்டுத் தென்னாட்டுக்கும் வந்தனர். தமிழ் நாட்டு மேலைக் கடற்கரையில் பொன்னும், மிளகும், வாசனைப் பொருள்களும் வாணிபம் செய்யப் பெற்றன. கீழைக் கரையில் பட்டு வாணிபம் சிறந்திருந்தது. இவ்வுண்மையைக் கி.மு ஆறாம் ஐந்தாம் நூற்றாண்டில்