166
வரலாற்றுக்கு முன்
படையெடுப்பைக் குறிப்பதோடு அந்நாட்டுச் சில பகுதிகள் அவர் ஆணையின் கீழ் இருந்தன என்றும் குறிக்கின்றது.[1] அந்த நாளில் அவரது ஆட்சி எல்லையைக் குறித்த படம் அத்துடன் கீழே தரப்பட்டுள்ளது. எனவே, தமிழ்நாட்டு எல்லை வரை சந்திரகுப்தர் வந்தார் என்பது வெளிப்படை. திரு பானர்ஜி அவர்களின் எழுத்துப்படி[2] ஆரியர்கள் இந்தோ ஆரியர்களாகிப் பஞ்சாபில் தங்கள் ஆட்சி எல்லையைப் பெருக்கிக்கொண்டபோது வடக்கே மகத நாட்டிலும் காமரூப நாட்டிலும் ஆண்டவர்கள் திராவிட மன்னர்களே என்பது விளங்குகின்றது. எனவே, அக்காலத்தில் ஆண்ட திராவிடர் அல்லது தமிழ் மன்னர்தம் பரம்பரையின் கடைசித் தலைமுறையாக நந்தர்கள் மகதத்தை ஆண்டிருக்கக்கூடும். எனவேதான் அவர்களுக்கும் தமிழருக்கும் இருந்த நட்பினைக்காண முடிகிறது. தமிழ் இலக்கியங்களும் அவர்களைப் பாராட்டுகின்றன.
தமிழர் அல்லது திராவிடர் பரம்பரையை அழிக்கச் சாணக்கியருடன் சேர்ந்த சந்திரகுப்தர் முயன்றிருப்பது இயல்பானதே. எனவே, வடநாட்டு ஆதிக்கத்தை ஒழித்த அவர், அவரது தென்னாட்டு ஆணையை அழிக்கவும் காலம் பார்த்திருப்பார். அது கோசர்வழி ஒரளவு நிறைவேறிற்று என்பது பொருந்தும்.
அவர் காலத்தில் இருந்த அலெக்ஸாந்தருக்குப் பின் வந்த கிரேக்க நாட்டு மன்னர் செலூக்கஸ் (Selukos) என்பவர் மெகஸ்தனிஸ் என்பவரைத் தூதுவராக அவர் அவைக்கு அனுப்பிவைத்தார் என்பது நாடறிந்த வரலாறாகும். மெகஸ்தனிஸ் வடநாட்டோடு நின்றுவிடாது தென்னாட்டுக்கும் இலங்கைக்குங்கூட வந்து, அவ்வந்நாட்டு