14
வரலாற்றுக்கு முன்
தமது நாட்டு அமைப்பை விரிவுபடுத்தினார்கள். அவர்கள் இந்தியாவுக்கு வந்தபோது இருக்குவேதம் உண்டாயிற்று. இரானிய நாட்டிலிருந்து ஆரியர் சிந்துவெளிக்கு வந்த காலம் கி.மு. 2000க்கும் 1500க்கும் இடையில் இருக்கலாம் எனக் கணக்கிட்டுள்ளனர்[1]. இருக்கு வேதம் உண்டானபோதிலும், அக்காலத்தில் எழுத்துக்கள் இன்மையின், அவர்கள் பரம்பரை பரம்பரையாக ஒருவர் மற்றவருக்குச் சொல்லியே அதைப் பாதுகாத்தார்கள். அதனாலேயே அது ‘சொல்லப் பட்டது என்ற பொருளில் வழங்கி வருகிறது போலும்! இருக்குவேதம் உண்டான பிறகு நெடுங்காலம் அவர்களுக்கு எழுத்தே இல்லை[2]. மற்றும், அதுவரை அவர்களுக்கு நிலைத்த வீடுகளோ, தெய்வங்களோ இருந்தனவாக அறிய இயலவில்லை. அவர்கள் தங்கள் கால்நடைகளாகிய ஆடு மாடுகளை நம்பியே பிழைத்து வந்தார்கள்; அவற்றைக் காக்க வேண்டுமெனவே, கடவுளரையும் உண்டாக்கி வழி பட்டார்கள்[3]. கலையும் அறிவியலும் அவர்கள் அறியாதன[4] அவர்கள் இந்திரனையே தங்கள் கால்நடைகளைக் காக்கும் தெய்வமாகக் கொண்டு வழிபட்டார்கள்[5]. பிரமன், திருமால், சிவன் என்ற மூன்று மூர்த்திகளும் அன்று அவர்களுக்குத் தெரியாதவர்கள். எனினும், சிவ வழிபாடு அவர்கள் வருகைக்கு முன்பே இந்தியாவில் இருந்ததென்பதைச் சிந்துவெளித் தொல்பொருளாராய்ச்சி நமக்கு நன்கு காட்டுகின்றது. கிருட்டிணனும் அவர்களுக்கு