வடக்கும் தெற்கும்
15
விரோதியே[1] அனுமனும் அவர்களுக்குப் பிற்பட்டோர்களின் கடவுளாக வேண்டும். வேதத்தில் அனுமன் என்ற பெயரே இல்லை.[2]
ஆரியர்கள் இங்கு வருமுன் வாழ்ந்த மக்கள் நாடு நகரங்களை அமைத்துக்கொண்டு வாழ்ந்ததைக் கண்டு தாங்களும் வீடுகள் கட்டக் கற்றுக்கொண்டார்கள்[3]. கட்டுப்பாடான குடும்பவாழ்க்கை முறையும் அதன் அடிப்படையில் அமைந்த நால்வகைச் சாதிப்பாகுபாடும் அக் காலத்தில் உண்டாயின[4]. அவர்கள் பல நம்பிக்கைகளால் ஏற்பட்ட அச்சத்தால் கடவுளைப் போற்றினார்கள். சிவப்புப் பசு வெள்ளைப் பால் தருவது தேவரால் நடைபெறுவதென இருக்கு வேதம் எடுத்துக் காட்டுகின்றது[5]. சூரிய உதயம் அதிசயமான ஒன்று என அவர்கள் கொண்டார்கள்.[6] இந்திரனே முக்கிய தெய்வமாகக் கேட்கக் கேட்கத் தருபவனாக விளங்கினான்[7]. பசு எருது முதலியவற்றைப் பலி கொடுக்கும் வழக்கமும் அக் காலத்தில் இருந்து வந்தது. யாகமே இந்த ஆரிய அடிப்படையில் வளர்ந்த இந்தோ ஐரோப்பியர்தம் செயல் எனப் புலாஸ்கர் எடுத்துக் காட்டுகின்றார்[8]. ஆரியருக்கு அக்காலத்தில் மொத்தம்
- ↑ Stone age in India, by P. T. Srinivasa Iyangar, р. 162.
- ↑ Vedlic Age, Vol. 1, p. 163.
- ↑ Rig Veda, p. 12.
- ↑ Rig Veda, p. 20
- ↑ இருக்கு, 1:62:9. 11:33, 2:40:2, 4:3:9, 6:17:6, 6:44:24, 6:72:4
- ↑ Rig Veda, p. 27.
- ↑ இருக்கு, 1:30:9, 8:69:2 & 3, 6:21:8, 3:49;3, 7: 29, 4:10.
- ↑ A.D. Pulasker in Treditional History from the earliest time to the accession of Parikhit (Vedic Age. р. 269)